- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
வீட்ல மீன் வாங்குனா ஒன்னு குழம்பு வைப்போம், இல்லனா மீன் பொரிச்சு சாப்பிடுவோம் இப்போ மீன் பொழிச்சது, மீன் புட்டு அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிடுவோம் ஆனா பொரிச்ச மீனை பொடிமாஸ் மாதிரி செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க ஒரு தடவை மட்டும் எப்படி ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி உங்களுக்கு செஞ்சு சாப்பிடணும்னு தோணும். இதுல நம்ம முட்டையும் சேர்க்க போறதால இந்த மீன் பொடிமாஸ் டேஸ்ட் பக்காவா இருக்கும். மீன் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த மீன் பொடிமாஸ் வச்சு சாப்பிட்டீங்கன்னா சொர்க்கமா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா சமைச்சு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா அப்பப்போ செஞ்சு சாப்பிடுங்க.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாங்கன்னா அவங்களுக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க கண்டிப்பா உங்க சமையலை பாராட்டுவாங்க. குழந்தைகளும் பெரியவர்களும் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபியா இந்த மீன் பொடிமாஸ் இருக்கும். இந்த மீன் பொடிமாஸ் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸிதான். சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம். இதுக்கு பொருட்களும் ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களே போதுமானது. இந்த மீன் பொடி மாஸ்க்கு நம்ம மீனை பொரிச்சு சேக்குறதால டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
இத மீன் குழம்புக்கு மட்டும் இல்லாம எல்லா வகையான காரக்குழம்புக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். ரசம் சாதத்துக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா கூட சூப்பரா தான் இருக்கும். அவ்ளோ ருசியான இந்த ரெசிபியை உங்க வீட்ல கண்டிப்பா செஞ்சு அசத்துங்க. இதுக்கு மிளகாய் தூள் மிளகாய் எதுவுமே சேர்க்கத் தேவையில்லை. கரம் மசாலாவும், மிளகுத்தூளும் இருந்தால் மட்டுமே போதும். ஒரு சூப்பரான சுவையில மீன் பொடிமாஸ் செஞ்சுடலாம். இப்ப வாங்க இந்த ருசியான மீன் பொடிமாஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எப்போதாவது வஞ்சரம் மீன் வாங்கினால் கிராமத்து ஸ்டைலில் குழம்பு வைத்து பாருங்கள் அடுத்த வீடு வரை மணக்கும்!!
Ingredients
Method
முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து மீன் மசாலா உப்பு எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள மீனை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் மீனின் முள் எடுத்து தனியாக போட்டுவிட்டு சதைப்பகுதியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மிளகு தூள் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் கரம் மசாலா சேர்த்து கலந்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள பொறித்த மீனையும் முட்டையையும் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான மீன் பொடிமாஸ் தயார்.






