ருசியான செட்டிநாடு பூண்டு ரசம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது செட்டிந

By Prem Kumar · 8/4/2024

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது செட்டிநாடு ரெசிபிக்கள். இந்த வகை ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும்.

அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். உணவுச் சமநிலையைப் பேணவும், உடல் நலத்தை பாதுகாப்பதிலும் இதற்கு அளப்பரிய பங்கு இருக்கிறது. எனவே தினமும் இல்லாவிட்டாலும், வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் உணவுடன் ரசம் எடுத்துக்கொள்ள தவற வேண்டாம்.

உங்களுக்கு சளி பிடித்திருந்தால் இந்த செட்டிநாடு பூண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள். இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு போன்ற மசாலாக்கள் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த அற்புதமான ரசம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவதோடு, வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு தீர்வு தருகிறது. மேலும் ஜலதோஷம், இருமல், சளி உள்ளிட்ட நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. உணவு சமையலில், செட்டி நாடு சமையலுக்கு தனி மவுசு இருக்கிறது. அந்த வகையில் செட்டிநாடு பூண்டு ரசம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

இதனையும் படியுங்கள் : அட்டகாசமான ருசியில் செட்டிநாடு பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்க! சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பக்காவான கிரேவி!

Recipes AMP · Quick view
View full