வீடே மணக்கும் படி செட்டிநாடு மட்டன் குழம்பு தீபாவளிக்கு இப்படி செஞ்சி பாருங்க!
செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, காரைக்குடி இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்க, சைவத்த
செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, காரைக்குடி இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்க, சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன.
செட்டிநாடு என்று பெயரை எங்கையாவது பார்த்தால் உடனே நம் நினைவிற்கு வருவது செட்டிநாடு மட்டன் குழம்புதான். செட்டிநாடு மட்டன் குழம்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற உணவு வகை. செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே. அந்த அளவிற்கு பெயர் போனது செட்டிநாடு மட்டன் குழம்பு. செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும்.
காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். எப்போதும் போன்று மட்டனை குழம்பு வைக்காமல், செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இப்போது செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செட்டிநாடு குழம்பை எல்லோரும் கடைகளில் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், அதை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.