வீடே மணக்கும் படி செட்டிநாடு மட்டன் குழம்பு தீபாவளிக்கு இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று. செட்டிநாடு உணவின் மசாலா நாவை சுண்டி இழுக்கும். தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, காரைக்குடி இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்க, சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன.

-விளம்பரம்-

செட்டிநாடு என்று பெயரை எங்கையாவது பார்த்தால் உடனே நம் நினைவிற்கு வருவது செட்டிநாடு மட்டன் குழம்புதான். செட்டிநாடு மட்டன் குழம்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற உணவு வகை. செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே. அந்த அளவிற்கு பெயர் போனது செட்டிநாடு மட்டன் குழம்பு. செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும்.

- Advertisement -

காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். எப்போதும் போன்று மட்டனை குழம்பு வைக்காமல், செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இப்போது செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செட்டிநாடு குழம்பை எல்லோரும் கடைகளில் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், அதை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.

Print
5 from 1 vote

செட்டிநாடு மட்டன் குழம்பு | chettinadu mutton kulambu recipe in tamil

செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே. அந்த அளவிற்கு பெயர் போனது செட்டிநாடு மட்டன் குழம்பு. செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாகும். காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை எனலாம். பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். எப்போதும் போன்று மட்டனை குழம்பு வைக்காமல், செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து சுவையுங்கள். இப்போது செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செட்டிநாடு குழம்பை எல்லோரும் கடைகளில் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், அதை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: chettinadu mutton kulambu
Yield: 5 People
Calories: 149kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 2 கப் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி                      
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 கப் கொத்தமல்லி தழை

மட்டன் ஊற‌ வைக்க

  • 3/4 கி மட்டன்
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு                              தேவையான அளவு

வறுத்து அரைக்க

  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் குறுமிளகு
  • 7 வர ‌மிளகாய்
  • 4 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் மல்லி

செய்முறை

  • முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி தூள், தயிர் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலத்து அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வரமிளகாய், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், குறுமிளகு, மல்லி, அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து ஆற‌விடவும்.
  • இவை நன்கு ஆறியதும் அதை ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து நன்கு ‌விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ‌காய்ந்ததும் சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கிக் கொள்ளவும். இறுதியில் மட்டனை சேர்த்து நன்றாக கலந்து மூன்று நிமிடம் வரை வேக விடவும்.
  • பின்பு நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் காரசாரமான செட்டிநாடு மட்டன் குழம்பு தயார்.

Nutrition

Serving: 800 g | Calories: 149kcal | Carbohydrates: 1g | Protein: 18.6g | Fat: 2g | Saturated Fat: 2.7g | Potassium: 301mg | Calcium: 4.4mg | Iron: 8.1mg