ருசியான செட்டிநாடு ஸ்டைல் பருப்பு ரசம் ஒரு முறை வீடே மணக்க மணக்க இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளத

By Prem Kumar · 9/1/2024

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு போன்ற மசாலாக்கள் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுச் சமநிலையைப் பேணவும், உடல் நலத்தை பாதுகாப்பதிலும் இதற்கு அளப்பரிய பங்கு இருக்கிறது. உடல் நிலை சரியில்லாத நேரங்களில் இப்படி ஒரு மிளகு ரசம் செய்து கொடுத்தால் சோர்வாக இருந்த நோயாளிகள் கூட சுறுசுறுப்பாக எழுந்து அமர்ந்து விடுவார்கள்.

சளி, கபம், தலைவலி, ஜலதோஷம், ஜுரம், உடல் வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை புண் என்று நீங்கள் எந்த வகையில் அவதிப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் ஒருமுறை இந்த ரசத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள், எல்லாம் எங்கு மாயமாகப் போகும் என்றே தெரியாது! எனவே தினமும் இல்லாவிட்டாலும், வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் உணவுடன் ரசம் எடுத்துக்கொள்ள தவற வேண்டாம். தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது செட்டிநாடு ரெசிபிக்கள். இந்த வகை ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும். அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு சளி பிடித்திருந்தால், செட்டிநாடு ரசம் செய்து சாப்பிடுங்கள். உணவு சமையலில், செட்டிநாடு சமையலுக்கு தனி மவுசு இருக்கிறது. அந்த வகையில் செட்டிநாடு ரசம் எப்படிச் செய்வதென்று இந்த பதிவில் காணலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு, இட்லி தோசை சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்!!!

Recipes AMP · Quick view
View full