Advertisement
அசைவம்

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

Advertisement

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும் அந்த அளவுக்கு சிக்கன் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்சமான ஒரு நான்வெஜ் அப்படின்னு சொல்லலாம். இந்த சிக்கன்ல மட்டும் நம்ம என்ன செஞ்சாலும் எல்லாமே சூப்பரா தான் வரும் சிக்கன் குழம்பு சிக்கன் பிரியாணி சிக்கன் பிரை, சிக்கன் பெப்பர் மசாலா சிக்கன் சுக்கா அப்படின்னு சிக்கன் வச்சு செய்யக்கூடிய எல்லாமே ரொம்ப டேஸ்டாவும் எல்லாராலயும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் .

கடையில் கிடைக்கிற சிக்கன் மசாலா தான் வாங்கி செய்வோம் ஆனா அந்த மாதிரி எதுவுமே கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே பிரெஷா அரைச்சு செய்ற ஒரு மசாலா வச்சு சூப்பரான சிக்கன் லெக் ஃப்ரை தான் செய்யப் போறோம். பொதுவாக சிக்கன் லெக் பீஸ் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் சிக்கன் பிரியாணில சிக்கன் லெக் பீஸ் இல்லன்னா எல்லாரும் பயங்கர கடுப்பாகிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு எமோஷன் தான் இந்த லெக் பீஸ்.

Advertisement

இந்த சிக்கன் லெக் பீஸ் கடைகள்ல வாங்கி கழுவி சுத்தம் செய்து பிரெஷா அரைச்சு வச்ச மசாலா போட்டு வைக்கும் போது ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். இந்த காரசாரமான வித்தியாசமான சிக்கன் லெக் ப்ரை நீங்களும் ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க இதை ஏதாவது ஒரு சாப்பாட்டுக்கு சைடிஷா மட்டும் இல்லாம சும்மாவே ஈவினிங் ஸ்நாக்ஸாவே நீங்க செஞ்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த அட்டகாசமான சுவையில் இருக்கக்கூடிய சிக்கன் லெக் ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

சிக்கன் லெக் ஃப்ரை | Chicken Leg Fry Recipe In Tamil

Print Recipe
கடையில் கிடைக்கிறசிக்கன் மசாலா தான் வாங்கி செய்வோம் ஆனா அந்த மாதிரி
Advertisement
எதுவுமே கடைகளில் வாங்காமல் வீட்டிலேயேபிரெஷா அரைச்சு செய்ற ஒரு மசாலா வச்சு சூப்பரான சிக்கன் லெக் ஃப்ரை தான் செய்யப் போறோம்.பொதுவாக சிக்கன் லெக் பீஸ் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் சிக்கன் பிரியாணிலசிக்கன் லெக் பீஸ் இல்லன்னா எல்லாரும் பயங்கர கடுப்பாகிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு எமோஷன்தான் இந்த லெக் பீஸ். ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க இதை ஏதாவது ஒரு சாப்பாட்டுக்குசைடிஷா மட்டும் இல்லாம சும்மாவே ஈவினிங் ஸ்நாக்ஸாவே நீங்க செஞ்சு சாப்பிடலாம்.
Advertisement
Course Fry, starters
Cuisine tamil nadu
Keyword chicken leg fry
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Servings 4
Calories 350

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன் லெக் பீஸ்
  • 5 காய்ந்த மிளகாய்
  • 10 சின்ன வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு
  • 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கன் லெக் பீஸை கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் பூண்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா சோம்பு, சீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  • கழுவி வைத்துள்ள சிக்கன் லெக் பீஸில் அரைத்த மசாலாவை சேர்த்து அரிசி மாவு சோள மாவு எலுமிச்சை சாறு தேவையானஅளவு உப்பு சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
     
  • நன்றாக ஊறிய பிறகு சூடான எண்ணெயில் சிக்கன் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் அதனுடன் அதே எண்ணெயில்கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வறுத்து சிக்கன் லெக் பீஸ் உடன் சேர்த்துக்கொண்டால் சுவையான காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை தயார்

Nutrition

Serving: 200g | Calories: 350kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 380mg | Calcium: 12mg

Advertisement
Ramya

Recent Posts

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

57 நிமிடங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

2 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

2 மணி நேரங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

6 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

6 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

6 மணி நேரங்கள் ago