Advertisement
அசைவம்

ருசியான சிக்கன் முந்திரி கிரேவி செய்வது எப்படி!

Advertisement

சிக்கன் முந்திரி கிரேவி இந்த ரெசிபி சுலபமாகவும், சுவையாகவும், வீட்டிலே செய்து விடலாம். இந்த கிரேவியை சப்பாத்தி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க.

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken Cashew Gravy Recipe In Tamil

Print Recipe
சிக்கன் முந்திரி கிரேவி இந்த ரெசிபி சுலபமாகவும், சுவையாகவும், வீட்டிலே செய்து விடலாம். இந்த கிரேவியை சப்பாத்தி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Chicken Gravy, சிக்கன் கிரேவி
Prep Time 30 minutes
Cook Time 10 minutes
Total Time 40 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ½ கிலோ சிக்கன்
  • 20 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் மல்லித்தூள்
  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் தயிர்
  • 2 ஸ்பூன் பால்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு தேவையானவை:

  • 10 முந்திரி
  • ½ ஸ்பூன் மிளகு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • ½ ஸ்பூன் சோம்பு
  • ¼ ஸ்பூன் கசகசா
  • 1 துண்டு பட்டை
  • 4 கிராம்பு

Instructions

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
  • அடுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
  • பின் அரைத்த மசாலாவை சுத்தம் செய்த சிக்கனல் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், பால், சேர்த்து நன்கு பிசைந்து, அதனை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேகவிடவும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மால்லித்தழையை தூவி இறக்கினால் சிக்கன் முந்திரி கிரேவி தயார்.

Nutrition

Carbohydrates: 2.78g | Fat: 6.54g | Saturated Fat: 1.717g | Cholesterol: 44mg | Sodium: 337mg | Potassium: 174mg | Fiber: 0.2g
Advertisement
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

9 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

11 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

21 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago