- Prep
- 30 min
- Cook
- 10 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
சிக்கன் முந்திரி கிரேவி இந்த ரெசிபி சுலபமாகவும், சுவையாகவும், வீட்டிலே செய்து விடலாம். இந்த கிரேவியை சப்பாத்தி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க.
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
அடுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
பின் அரைத்த மசாலாவை சுத்தம் செய்த சிக்கனல் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், பால், சேர்த்து நன்கு பிசைந்து, அதனை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 20 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேகவிடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும், அதில் மால்லித்தழையை தூவி இறக்கினால் சிக்கன் முந்திரி கிரேவி தயார்.






