Advertisement
அசைவம்

அடிக்கடி பிரியாணி செய்வதற்கு இப்படி சிக்கன் புலாவ் செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

Advertisement

பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத்தெரியது. அதிலும் எளிமையான முறையில் செய்யத்தெரியாமல் இருக்கலாம். ஆகவே அத்தகையவர்களுக்காக, இப்பொழுது எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி சிக்கன் புலாவ் ரெசிபி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

இந்த மாரி உங்க வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் போதும் அவளவுதான் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாக. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்போ செய்விக்கணும் கேட்பாங்க, ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சிக்கன் புலாவ்.

Advertisement

இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

சிக்கன் புலாவ் | Chicken Pulao Recipe In Tamil

Print Recipe
பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத்தெரியது. அதிலும் எளிமையான முறையில் செய்யத்தெரியாமல் இருக்கலாம். ஆகவே அத்தகையவர்களுக்காக, இப்பொழுது எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி சிக்கன் புலாவ் ரெசிபி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.
இந்த மாரி உங்க வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் போதும் அவளவுதான் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாக. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்போ செய்விக்கணும் கேட்பாங்க, ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சிக்கன் புலாவ்.
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword chicken pulao, சிக்கன் புலாவ்
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Total Time 27 minutes
Servings 4 people

Equipment

  • 1 குக்கர்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ½ கிலோ சிக்கன்
  • ஒரு கை பூண்டு
  • 200 கிராம் வெங்காயம்
  • 6 பச்சைமிளகாய்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கப் தயிர்
  • ½ கப் புதினா கொத்தமல்லி
  • 2 பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 2 மராட்டி மொக்கு
  • ½ கிலோ` பாசுமதி அரிசி
  • 1 கப் தேங்காய் பால்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 குழிக்கரண்டி எண்ணெய்

Instructions

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துவைத்துக்கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • குக்கரில் எண்ணெய் ஊற்றிஎண்ணெய் காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு, புதினா, பச்சைமிளகாய், போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போடவும். அத்துடன் ஒரு கைப்பிடி பூண்டு போட்டு வதக்கவும்.
  • அடுத்து சிக்கனை போட்டு கிளறவும். சிக்கன் சிறிது வெந்ததும் தயிர் சேர்க்கவும்.
  • பின்னர் அரிசி சேர்த்து கிளறவும். அரிசி சேர்ந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் 1 கப் தேங்காய் பால், ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
  • மீதமுள்ள கொத்தமல்லி, புதினாவை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான சிக்கன் புலாவ் ரெடி.
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

3 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

4 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

6 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

12 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

14 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

15 மணி நேரங்கள் ago