ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு சிக்கன் சாம்பார் செஞ்சு ச

By Prem Kumar · 14/5/2024

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு சிக்கன் சாம்பார் செஞ்சு சாப்பிடுங்களேன். சிக்கன் எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்கு தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபி தான் இது.

சிக்கனில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபாப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். இதுவரை சிக்கனில் சாம்பார் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சிக்கனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்து கொடுத்தாலும் அல்லது மூன்று வேலையும் செய்து கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதனால் விரும்பி சாப்பிடும் சிக்கனை ஒரே மாதிரி செய்து கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் ருசியாகவும் இருக்கும். இந்த சிக்கன் சாம்பார் சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் சாம்பார் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த சிக்கன் சாம்பார் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

Recipes AMP · Quick view
View full