Advertisement
அசைவம்

அடுத்தமுறை சிக்கன் வாங்கினால் வீடே மணக்க மணக்க சிக்கன் தண்ணீர் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

சிக்கன்ல நிறைய சைட் டிஷ்ஷ்கள் இருந்தாலும் சிக்கன்ல குழம்பு செஞ்சு சாப்பிடுவது தான் நிறைய பேர் விரும்புவாங்க. அதுவும் இந்த மாதிரி சிக்கன் தண்ணி குழம்பு செஞ்சு கொடுத்துடுவோம் அப்படின்னா அது ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த தண்ணி குழம்பு சாதம் , இட்லி, தோசை,  சப்பாத்தி, பூரி எல்லாத்துக்கும் செமையா இருக்கும். இதை சிக்கன் தண்ணி குழம்பு மேல எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்துகிட்டே தான் இருக்கும். இந்த சுவையான சிக்கன் தண்ணி குழம்பு ஹோட்டல்ல சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். அதே மாதிரி சுவையா இப்போ வீட்ல எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.

சுவையான சிக்கன் தண்ணி குழம்பு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு உணவு தான் சாப்பிடும்போது நார்மலா சாப்பிட்டு இருப்போம். அதே வீட்ல சாப்பிட்டா இந்த சிக்கன்  தண்ணி இட்லி , தோசை , சப்பாத்தி , பரோட்டா , சாதம் ஏன் தயிர் சாதம் கூட சேர்த்து வச்சு சாப்பிடும்போது அவ்ளோ சூப்பரா இருக்கும். லெக் பீஸ் ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கும் அது சிக்கன் கால் மாதிரி சேர்த்துக் கொள்வது எல்லாருக்கும் பிடிக்கும். சிக்கன்ல என்ன மாதிரி உணவுகள் செய்தாலும் நம்ம எல்லாருக்குமே கரேவி அப்படிங்கிற ஒரு விஷயம் ரொம்பவே பிடிக்கும்.

Advertisement

அதனால தான் நம்ம அதிகமா சிக்கன் பிரை பண்ணி சாப்பிடறதும் 65 , வறுவல், கிரேவி மட்டுமில்லாமல் தந்தூரி இது மாதிரி உணவுகள் அதிகமாக எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் சிக்கன் தண்ணி குழம்பு எல்லாருக்கும் பிடிக்கிற ஒரு உணவுதான். இந்த சிக்கன் தண்ணி குழம்பு ஹோட்டல் ஸ்டைல்ல வீட்ல எப்படி ரொம்ப சூப்பரா சுலபமா செய்யறது அப்படிங்கிறது தான் இந்த பதிவுல பாத்துட்டு இருக்கோம். இந்த சுவையான சிக்கன் தண்ணி குழம்பு எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி ஈஸியா வீட்டிலேயே செய்யலாம் தெரிஞ்சிக்கலாம் வாங்க.

சிக்கன் தண்ணி குழம்பு | Chicken thani kulambu recipe in tamil

Print Recipe
சிக்கன்ல நிறைய சைட் டிஷ்ஷ்கள் இருந்தாலும் சிக்கன்ல குழம்பு செஞ்சு சாப்பிடுவது தான் நிறைய
Advertisement
பேர் விரும்புவாங்க. அதுவும் இந்த மாதிரி சிக்கன் தண்ணி குழம்பு செஞ்சு கொடுத்துடுவோம் அப்படின்னா அது ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த தண்ணி குழம்பு சாதம் , இட்லி, தோசை,  சப்பாத்தி, பூரி எல்லாத்துக்கும் செமையா இருக்கும். இதை சிக்கன் தண்ணி குழம்பு மேல எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்துகிட்டே தான் இருக்கும். இந்த சுவையான சிக்கன் தண்ணி குழம்பு ஹோட்டல்ல சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். அதே மாதிரி சுவையா இப்போ வீட்ல எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.
Advertisement
Course Kulambu
Cuisine tamilnadu
Keyword Allepey Chicken Curry, Andhra Pepper Chicken, Burnt Chicken Kulambu
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 7 People
Calories 169
Cost 150

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

Ingredients

  • 1/2 கிலோ சிக்கன் எலும்பு கறி
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 கத்தரிக்காய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் சோம்பு   
  • 1 ஸ்பூன் சீரகம் 
  • 2 தக்காளி                      
  • 1 துண்டு பட்டை 
  • 1 ஏலக்காய்
  • 1 கிராம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து பத்து நிமிடத்திற்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், சோம்பு, பட்டை,  கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  • அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
  • பிறகு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொதிக்கின்ற குழம்பில் சேர்த்து விட வேண்டும்.
  • கடைசியாக சிக்கனையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சிக்கன் தண்ணீர் குழம்பு சுட சுட தயார்.
  • இதனை இட்லி தோசை சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Nutrition

Calories: 169kcal | Carbohydrates: 20g | Protein: 25g | Fat: 15g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

1 மணி நேரம் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

10 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

10 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

11 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

13 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

14 மணி நேரங்கள் ago