- Prep
- 15 min
- Cook
- 20 min
- Total
- 35 min
- Serves
- 7
- Cuisine
- tamilnadu
- Course
- Kulambu
சிக்கன்ல நிறைய சைட் டிஷ்ஷ்கள் இருந்தாலும் சிக்கன்ல குழம்பு செஞ்சு சாப்பிடுவது தான் நிறைய பேர் விரும்புவாங்க. அதுவும் இந்த மாதிரி சிக்கன் தண்ணி குழம்பு செஞ்சு கொடுத்துடுவோம் அப்படின்னா அது ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த தண்ணி குழம்பு சாதம் , இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி எல்லாத்துக்கும் செமையா இருக்கும். இதை சிக்கன் தண்ணி குழம்பு மேல எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்துகிட்டே தான் இருக்கும். இந்த சுவையான சிக்கன் தண்ணி குழம்பு ஹோட்டல்ல சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். அதே மாதிரி சுவையா இப்போ வீட்ல எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.
சுவையான சிக்கன் தண்ணி குழம்பு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு உணவு தான் சாப்பிடும்போது நார்மலா சாப்பிட்டு இருப்போம். அதே வீட்ல சாப்பிட்டா இந்த சிக்கன் தண்ணி இட்லி , தோசை , சப்பாத்தி , பரோட்டா , சாதம் ஏன் தயிர் சாதம் கூட சேர்த்து வச்சு சாப்பிடும்போது அவ்ளோ சூப்பரா இருக்கும். லெக் பீஸ் ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கும் அது சிக்கன் கால் மாதிரி சேர்த்துக் கொள்வது எல்லாருக்கும் பிடிக்கும். சிக்கன்ல என்ன மாதிரி உணவுகள் செய்தாலும் நம்ம எல்லாருக்குமே கரேவி அப்படிங்கிற ஒரு விஷயம் ரொம்பவே பிடிக்கும்.
அதனால தான் நம்ம அதிகமா சிக்கன் பிரை பண்ணி சாப்பிடறதும் 65 , வறுவல், கிரேவி மட்டுமில்லாமல் தந்தூரி இது மாதிரி உணவுகள் அதிகமாக எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் சிக்கன் தண்ணி குழம்பு எல்லாருக்கும் பிடிக்கிற ஒரு உணவுதான். இந்த சிக்கன் தண்ணி குழம்பு ஹோட்டல் ஸ்டைல்ல வீட்ல எப்படி ரொம்ப சூப்பரா சுலபமா செய்யறது அப்படிங்கிறது தான் இந்த பதிவுல பாத்துட்டு இருக்கோம். இந்த சுவையான சிக்கன் தண்ணி குழம்பு எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி ஈஸியா வீட்டிலேயே செய்யலாம் தெரிஞ்சிக்கலாம் வாங்க.
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து பத்து நிமிடத்திற்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
எடுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொதிக்கின்ற குழம்பில் சேர்த்து விட வேண்டும்.
கடைசியாக சிக்கனையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சிக்கன் தண்ணீர் குழம்பு சுட சுட தயார்.
இதனை இட்லி தோசை சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.






