இரவு வேளை உணவிற்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா அப்படியானால் இந்த சோலா பட்டூரா செய்து பாருங்கள்!!!
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரி போன்று வித்தியாசமான இரவு உணவாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் சோலா பட்டூரா செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையு
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரி போன்று வித்தியாசமான இரவு உணவாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் உணவுகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் சோலா பட்டூரா செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு உருளைக்கிழங்கு மசாலா, பன்னீர், சென்னா மசாலா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த சோலா பட்டூரா என்பது வட இந்தியாவில் தோன்றிய ஒரு உணவு வகையாகும். இருப்பினும் இந்தியாவில், தில்லியில் இது மிகவும் பிரபலமாக இருக்கிறது.
இது மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஒரு பூரி வகையாகும். இது கொண்டைக் கடலையுடன் செய்யப்படுகிற மசாலாவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இது மதன் முதலில் உத்தரப் பிரதேசத்தில் தோன்றிய உணவு. பின் பஞ்சாபில் காலை உணவாக இந்த உணவு மிகவும் பிரபலமானது. இது சில நேரங்களில் லஸ்ஸியுடன் காலை உணவாக உண்ணப்படுகிறது. இது தெரு உணவு அல்லது முழுமையான உணவாகவும் இருக்கலாம்.
பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் எதை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் பூரியை கொஞ்சம் வித்தியாசமாக செய்ய உள்ளோம். இந்த சோலா பட்டூரா சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!