- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 6
- Cuisine
- north india, punjabi
- Course
- Side Dish
இன்னிக்கு சூப்பரான வட இந்திய உணவான ஆலு மேத்தி எப்படி செய்யறது அப்படின்னு பார்க்க இருக்கோம் . அது என்னடா பேரு ஆளலு மேத்தி அப்படின்னு பாத்தீங்களா அது ஒன்னும் இல்லங்க உருளைக்கிழங்கும் வெந்தயக் கீரையும் அதுதான் பேரு. இப்போ உருளைக்கிழங்கு வெந்தயக்கீரையும் வைத்து சுவையான ஒரு சைடு டிஷ் பண்ண போறோம். அந்த சைடிஸ் எல்லா கலந்த சாதத்துக்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். எப்ப பாத்தாலும் கீரை வாங்கினா கடையல், பொரியல், குழம்பு வச்சு போரடிக்குதா? நமக்கு இந்த மாதிரி செஞ்சு சாப்பிட ரொம்பவே வித்தியாசமாவும் இருக்கும் புதுசாவும் இருக்கும். நம்ம எல்லாம் உருளைக்கிழங்கு தனியாவும் கீரையை தனியாவும் சமைத்து சாப்பிடுவோம்.
நம்ம உருளைக்கிழங்கையும் கீரையும் சேர்த்து செஞ்சோம்னா எப்படி இருக்கும். அந்த மாதிரி சுவையான ஆலுவும் மேத்தியும் எப்படி செய்வது என்று தெரிந்து இருக்கோம். இந்த பதிவுல எப்படி சூப்பரான ஆலு மேத்தி செய்யலாம். வட இந்தியாவில் ரொம்பவே பேமஸான ஒரு உணவு இந்த ஆலு மேத்தி. உணவு எல்லாத்துக்குமே இந்த மேத்திய சேர்த்து பண்ணுவாங்க. அதாவது வெந்தயக்கீரை அவங்க அதிக அளவுல யூஸ் பண்ணுவாங்க.
இந்த வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தருவது மட்டும் இல்லாம அதிக அளவு இரும்பு சத்து இருக்கிறதுனால இது உடலுக்கு நிறைய சத்துக்களை கொடுக்கக் கூடியது. அது கூட இந்த உருளைக்கிழங்கை வைத்து செய்யும் போது அது இன்னும் சூப்பரா இருக்கும். அதுவும் நம்ம இப்ப பண்ண போற உருளைக்கிழங்கு என்னன்னு பார்த்தீங்கன்னா பேபி உருளைக்கிழங்கு. அதாவது குட்டி குட்டி உருளைக்கிழங்குல பண்ண போறோம். இந்த சுவையான பஞ்சாபி ஆலு மேத்திய எப்படி ஈசியா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெந்தயக் கீரையை இலைகளை தனியாக பிரித்து எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு இது மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு இது சீரகத்தூள், சாட் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு இதில் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் .
பிறகு அதில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பேபி உருளைகிழங்கை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சூடாக பரிமாறினால் சுவையான ஆலு மேத்தி தயார். இது எல்லாவிதமான கலந்த சாதத்திற்கும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.






