கொத்தவரங்காய் துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

கொத்தவரங்காய் வச்சு பொரியல் கொத்தவரங்காய் வச்சு புளிக்குழம்பு செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க. ஆனா கொத்தவரங்காய் வச்சு துவையல் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா. ஒரு தடவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இதுல உடம்பில் இருக்க கொழுப்புகளை குறைக்க

By ·

கொத்தவரங்காய் வச்சு பொரியல் கொத்தவரங்காய் வச்சு புளிக்குழம்பு செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க. ஆனா கொத்தவரங்காய் வச்சு துவையல் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா. ஒரு தடவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இதுல உடம்பில் இருக்க கொழுப்புகளை குறைக்கிற சக்தி இருக்கு. கொத்தவரங்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது ஒரு சிலருக்கு தேங்காய் துருவல் எல்லாம் போட்டு வேர்க்கடலை பொடி போட்டு செய்ற பொரியல் ரொம்ப பிடிக்கும். ஆனால் கொத்தவரங்காயே வேணா பிடிக்காது சாப்பிட மாட்டேன் அப்படின்னு அடம் பிடிக்கிறவங்களுக்கு இந்த மாதிரி கொத்தவரங்காய் துவையல் ஒரு தடவை செஞ்சு கொடுங்க. கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.

தேங்காய் துவையல் பருப்பு துவையல் கொள்ளு துவையல் பீர்க்கங்காய் தோல் துவையல் அப்படின்னு எக்கச்சக்கமா நிறைய துவையல் ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இந்த மாதிரி கொத்தவரங்காய் வச்சு கண்டிப்பா துவையல் செஞ்சிருக்கவே மாட்டீங்க. ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க. கொத்தவரங்காய் ஓட வாசனையே தெரியாத அளவுக்கு அவ்ளோ சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு மேல கொஞ்சமா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இந்த துவையலையே சாதம் போட்டு கிளறி லஞ்ச் பாக்ஸா கொடுத்துவிடலாம். சுடு கஞ்சி ரசம் சாதம் புளி சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் இல்ல இது எல்லாத்துக்கும் சைடிஷா கூட தொட்டுக்கலாம். அவ்ளோ சூப்பரா இருக்கும். கொத்தவரங்காய் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சு ஊட்டி விட்டுடுங்க அதுல கொத்தவரங்காய் போட்டு இருக்கீங்க அப்படின்னே தெரியாது. அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி தான் ஏதாவது செஞ்சு கொடுக்கணும். இப்ப வாங்க இந்த சுவையான கொத்தவரங்காய் துவையல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஒருமுறை இந்த கொத்தவரங்காய் மோர் குழம்பை செய்து கொடுத்து பாருங்கள். இனி வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும் இதைச் செய்யச் சொல்லி உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை