Home Uncategorized ஒருமுறை இந்த கொத்தவரங்காய் மோர் குழம்பை செய்து கொடுத்து பாருங்கள். இனி வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும்...

ஒருமுறை இந்த கொத்தவரங்காய் மோர் குழம்பை செய்து கொடுத்து பாருங்கள். இனி வீட்டில் உள்ளவர்கள் மறுபடியும் இதைச் செய்யச் சொல்லி உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்

தினமும் மதிய உணவிற்காக ஏதேனும் ஒரு குழம்பு, பொரியல் என்று சமைத்து வைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய வெப்பமான சூழ்நிலையில் காரமான குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை இன்னும் நமது உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது. அதற்காக உணவுடன் தயிர் சேர்த்துக் கொள்வது என்பது நமது உடல் சூட்டை சமநிலையில் வைக்கிறது. அதற்காக இந்த மோர் குழம்பை அடிக்கடி சிறிதளவாவது சாதத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

மோர் குழம்புடன் கொத்தவரங்காய் சேர்த்து செய்யும் மோர் குழம்பு மிகவும் சுவையாக இருக்கிறது. கல்யாண வீடுகளிலும், விசேஷ பந்தியிலும் இதுபோன்ற மோர் குழம்பு இடம்பெறுகிறது. வாருங்கள் இந்த சுவையான கொத்தவரங்காய் மோர் குழம்பை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். வித்தியாசமான முறையில் ‘கொத்தவரங்காய்  மோர் குழம்பு’ இப்படி ஒரு முறை வச்சு பாருங்க! அதற்குப் பிறகு இதே முறையில் தான் செய்து பாருங்களேன், அவ்ளோ ருசியா இருக்கும்.

மோர் குழம்பு என்றாலே முதலில் தேர்ந்தெடுக்கும் காய் வெண்டைக்காயை ஆக தான் இருக்கும். வெண்டைக்காய் சேர்த்து செய்த மோர் குழம்பு அவ்வளவு அட்டகாசமான ருசியில் இருக்கும். அந்த வகையில் இந்த முறையில் கொத்தவரங்காய்  மோர் குழம்பு செய்தால் இன்னும் கூடுதல் சுவை நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த மோர் குழம்பு செய்வதற்கு அதிகம் பொருட்களும் தேவைப்படுவதில்லை. சட்டென பத்தே நிமிடத்தில் எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடலாம். வித்தியாசமான முறையில் கொத்தவரங்காய்  சேர்த்து செய்யப்படும் இந்த கொத்தவரங்காய் மோர் குழம்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், ட்ரை பண்ணி பாருங்க! அதை எப்படி செய்வது? என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Print
No ratings yet

கொத்தவரங்காய் மோர் குழம்பு | Cluster Beans Mor Kulambu

மோர் குழம்பு என்றாலே முதலில் தேர்ந்தெடுக்கும்காய் வெண்டைக்காயை ஆக தான் இருக்கும். வெண்டைக்காய் சேர்த்து செய்த மோர் குழம்பு அவ்வளவுஅட்டகாசமான ருசியில் இருக்கும். அந்த வகையில் இந்த முறையில் கொத்தவரங்காய்  மோர் குழம்பு செய்தால் இன்னும் கூடுதல் சுவை நிச்சயம்உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த மோர் குழம்பு செய்வதற்கு அதிகம் பொருட்களும் தேவைப்படுவதில்லை.சட்டென பத்தே நிமிடத்தில் எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடலாம். வித்தியாசமானமுறையில் கொத்தவரங்காய்  சேர்த்து செய்யப்படும்இந்த கொத்தவரங்காய் மோர் குழம்பு நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும், ட்ரை பண்ணி பாருங்க!அதை எப்படி செய்வது? என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Cluster Beans Mor Kulambu
Yield: 4
Calories: 153kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ கொத்தவரங்காய்
  • 2 கப் கெட்டி மோர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • தண்ணீர் தேவைக்கேற்ப

அரைத்தல்

  • 1/4 கப் தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

தாளித்தல்

  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • கொத்தவரங்காயை 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தவரங்காயுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  • மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, தனியா, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதினை வேக வைத்த கொத்தவரங்காயுடன் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
  • அதன் பின் மோரை கொத்தவரங்காயுடன் கலந்து, நுரைக்க கொதித்ததும் இறக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
     
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைதாளித்து மோர் குழம்பில் சேர்க்கவும்
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் இதை சாதத்திற்கு சேர்த்து சாப்பிடலாம்

Nutrition

Serving: 100g | Calories: 153kcal | Carbohydrates: 20g | Protein: 7g | Fat: 6g | Sodium: 402mg | Fiber: 5g