Home Uncategorized சூப்பரான காய்கறி அவியல் ஈஸியா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சூப்பரான காய்கறி அவியல் ஈஸியா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

நாகர்கோவில் கன்னியாகுமரி ஏரியால ரொம்பவே பேமஸ் ஆக இருக்கக்கூடிய ஒரு சூப்பரான சிம்பிளான அவியல் பாக்க போறோம். வீட்ல நிறைய காய்கறிகள் இருந்தால் அதை வீணாக்காமல் இந்த அவியல் செஞ்சு பாருங்க சாப்பிடுறதுக்கே ரொம்ப ருசியா இருக்கும். காரக்குழம்பு ரசம் எல்லாத்துக்கும் சைடிஷா வைத்து சாப்பிடுவதற்கு இந்த அவியல் ரொம்ப சூப்பரா இருக்கும். சாம்பார் சாதத்துக்கும் கூட இந்த அவியல் ரொம்ப சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

தேங்காய் கூட சீரகம் பச்சை மிளகாய் சோம்பு எல்லாமே சேர்த்து அரைச்சு ஊத்தி வைக்கக்கூடிய இந்த அவியல் ரொம்பவே டேஸ்டா இருக்கும் சாதாரண எண்ணெயில் தாளிச்சு ஊத்தாம தேங்காய் எண்ணெய் ஊத்தி தாளிச்சா ரொம்ப டேஸ்டா இருக்கும். கல்யாண வீடுகள்ல இந்த அவியல் பந்தில சாப்பாட்டுல கண்டிப்பா இருக்கும். இது இல்ல நா அந்த கல்யாண சாப்பாடு நிறைவேறாது அப்படின்னு சொல்லலாம்.

இந்த காய்கறிகள் எல்லாம் சாப்பிடுவதால் எல்லாருக்குமே ரொம்ப ஆரோக்கியமானது அதுலயும் நிறைய காய்கறிகள் வைத்து சாப்பிடும்போது அந்த காய்கறிகள் இருந்து நமக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும். இத சாதத்துக்கு சைடிஷா மட்டும்தான் வெச்சி சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது. இந்த அவியலையே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

நிறைய மசாலாக்கள் எதுவும் சேர்க்காமல் செய்த இந்த அவியலை குழந்தைகளுக்கு தாராளமா சாப்பிட கொடுக்கலாம். ரொம்ப வே சிம்பிளா சூப்பரா அட்டகாசமான டேஸ்ட்ல செய்யக்கூடிய இந்த அவியல எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்

Print
No ratings yet

காய்கறி அவியல் | Vegetable Aviyal Recipe In Tamil

நாகர்கோவில் கன்னியாகுமரி ஏரியால ரொம்பவே பேமஸ் ஆக இருக்கக்கூடிய ஒருசூப்பரான சிம்பிளான அவியல் பாக்க போறோம். வீட்ல நிறைய காய்கறிகள் இருந்தால் அதை வீணாக்காமல் இந்த அவியல் செஞ்சு பாருங்க சாப்பிடுறதுக்கே ரொம்ப ருசியா இருக்கும். காரக்குழம்பு ரசம் எல்லாத்துக்கும் சைடிஷா வைத்து சாப்பிடுவதற்கு இந்த அவியல் ரொம்ப சூப்பரா இருக்கும். சாம்பார் சாதத்துக்கும் கூட இந்த அவியல் ரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Vegetable Aviyal
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் கத்திரிக்காய்
  • 1 வாழைக்காய்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 முருங்கைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • காய்கறிகளை வெட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம், சோம்பு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  • காய்கறி அரைவேக்காடு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  •  
    காய்கறிகளும் தேங்காய் கலவையும் ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக தாளித்து காய்கறியுடன் சேர்த்தால் சுவையான காய்கறி அவியல் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 1mg | Potassium: 104mg

-விளம்பரம்-