வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத வச்சு தான் அசைவம் மாதிரி நெனச்சு சாப்பிடுவோம். இந்த காளான் காலிஃப்ளவர் சோயா இதெல்லாம் வச்சு அசைவ சுவையில ரெசிபி செஞ்சு சாப்பிட்டா ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். காளான் வெற்றியை நம்ம காளான் பிரியாணி காளான் கிரேவி காளான் 65 கூட செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.
ஆனால் இந்த காளான் வச்சு சூப்பரான காளான் கொத்துக்கறி தான் செய்யப் போறோம். இந்த காளான் கொத்து கரிய பரோட்டா நான் இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப சூப்பரா அல்டிமேட் ஆக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த காளான் கொத்துக்கறிய செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த காளான் கொத்துக்கறியை தான் செஞ்சு சாப்பிடுவீங்க.
அசைவ சுவையில சாப்பிடுறதுக்கே ரொம்ப டேஸ்டா சூப்பரா இருக்கும். காளான் பொடிப்பொடியா நறுக்கி இந்த காளான் கொத்துக்கறி செய்யும்போது காலால் நல்ல வெந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான காளான் கொத்துக்கறி எப்படி வீட்டிலேயே சூப்பரா அட்டகாசமான சுவையில் செய்யலாம்னு பாக்கலாம்.
காளான் கொத்துக்கறி | Mushroom kothukari recipe in Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ காளான்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 டீஸ்பூன் சோம்பு
- கருவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லிஇலைகள் சிறிதளவு
செய்முறை
- முதலில் காளானை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து அதனுடன் கருவேப்பிலைவெங்காயமும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கி காளானையும் சேர்த்து வதக்கவும்அதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
- பிறகு அதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாககொதிக்க வைக்கவும்.
- காளான் நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான காளான் கொத்துக்கறி தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!