பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

- Advertisement -

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான் ரொம்ப ரொம்ப பிடிக்குது இதுதான் அதிகமாக விரும்பி சாப்பிடுறாங்க அந்த வகையில எப்பவுமே குழந்தைகளுக்கு வெளியில கடைகளிலேயே வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே அவங்களுக்கு புடிச்ச மாதிரியான ஸ்னாக்ஸை நம்ம செஞ்சு கொடுக்கலாம் அதுவும் ஆரோக்கியமான முறையில் செஞ்சு கொடுக்கலாம்.

-விளம்பரம்-

உருளைக்கிழங்கு வச்சு குழந்தைகளுக்கு பிரெஞ்சு ப்ரைஸ் செஞ்சு கொடுத்திருப்போம் ஆனா உங்க வீட்ல உருளைக்கிழங்கு இல்லை அப்படின்னா கேரட் இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான கேரட் ப்ரைஸ் செஞ்சு கொடுக்கலாம் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க கேரட் குழந்தைகளுக்கு கொடுக்கிறது ரொம்பவே நல்லது கேரட் சாப்பிடுவதால் எல்லாருக்குமே நிறைய ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும்.

- Advertisement -

அந்த வகையில் கேரட் பொரியல் ஆவோ இல்ல கேரட் ஜூஸாவோ குடிக்க பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி சூப்பரான கிரன்ச்சியான கேரட் ப்ரைஸ் செஞ்சு குடுங்க குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க அதுக்கப்புறம் நீங்களே செஞ்சு கொடுக்கல அப்படின்னாலும் அவங்களே உங்ககிட்ட கேட்டு வாங்கி செஞ்சு தர சொல்லி சாப்பிடுவாங்க.

அந்த அளவுக்கு இந்த கேரட் ப்ரைஸ் ஓட டேஸ்ட் அவங்களுக்கு பிடிச்சு போயிடும் வெளியில நல்லா மொறு மொறுன்னு உள்ளுக்குள்ள நல்லா சாப்டா இருக்கிறதால இந்த கேரட் சைஸ் குழந்தைகளுக்கு ரொம்ப வெயிட் பிடிக்கும் நீங்களும் வீட்டுல ஒரு தடவ இந்த கேரட் பிரைஸ் ஆரோக்கியமான முறையில் செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான கேரட் ப்ரைஸ் வீட்ல எப்படி ஆரோக்கியமா சீக்கிரமா செய்வதென்று பார்க்கலாம்

Print
No ratings yet

கேரட் ப்ரைஸ் | Carrot Fries Recipe In Tamil

உருளைக்கிழங்கு வச்சு குழந்தைகளுக்கு பிரெஞ்சு ப்ரைஸ் செஞ்சு கொடுத்திருப்போம் ஆனா உங்க வீட்ல உருளைக்கிழங்குஇல்லை அப்படின்னா கேரட் இருந்தா போதும் அதை வைத்து சூப்பரான கேரட் ப்ரைஸ் செஞ்சு கொடுக்கலாம்குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க கேரட் குழந்தைகளுக்கு கொடுக்கிறது ரொம்பவேநல்லது கேரட் சாப்பிடுவதால் எல்லாருக்குமே நிறைய ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும். நீங்களும் வீட்டுல ஒரு தடவ இந்த கேரட் பிரைஸ் ஆரோக்கியமானமுறையில் செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: snacks
Cuisine: French, tamil nadu
Keyword: Carrot French Fries
Yield: 4
Calories: 190kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 பெரிய கேரட்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1 டீஸ்பூன் அரிசி மாவு
  • 1 கப் பிரட் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கேரட்டை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் கேரட்டை மூன்று நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
     
  • பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் சோள மாவு அரிசி மாவு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  •  
    பிறகு அதனை பிரட் தூளில் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பிரட்டி வைத்துள்ள கேரட்டை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து பரிமாறினால் சுவையான கேரட் ப்ரைஸ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 190kcal | Carbohydrates: 12g | Protein: 8g | Sodium: 56mg | Potassium: 189mg | Vitamin C: 6mg | Calcium: 1mg

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான கேரட் மசால் வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி!

-விளம்பரம்-