மொறு மொறுனு ருசியான கேரட் மசால் வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! பக்காவான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி!

- Advertisement -

வீட்டிற்கு யாராவது திடீரென விருந்தாளி வந்து விட்டாலோ அல்லது நமக்கே கூட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், டிபனுக்கு சைடிஷ் ஆக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் முதலில் ஞாபகத்துக்கு வருவது வடை தான். ஆனால் இதற்கு பருப்பு ஊற வைத்து அரைத்து என வேலை கொஞ்சம் அதிகமாக நீளும் என்பதால் பெரும்பாலும் இதை செய்ய சோம்பல் பட்டு விடுகிறோம். இனி அதற்கு அவசியமே இல்லை வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பத்தாவது நிமிடத்தில் சுடச்சுட கேரட் வடை ரெடி பண்ணிடலாம். வேர் காய்கறிகளில் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. இந்த அற்புத காய்கறியை பச்சையாகவும், சமைத்தும் பயன் பெறலாம். மேலும், இவற்றை நாம் அன்றாட எடுத்துக்கொள்வதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இது கண்களில் ஈரப்பதத்தை காக்கப் பயன்படுகிறது. மேலும், வயதான காலத்தில் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்கவும் உதவுகிறது.

-விளம்பரம்-

நம்முடைய அன்றாட சமையல்களில் இவற்றை சேர்த்துக்கொண்டால் மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறையும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத காயில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான வடை தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்ததும் சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான்.

- Advertisement -
Print
2.34 from 3 votes

கேரட் வடை | Carrot Vadai Recipe In Tamil

வீட்டிற்கு யாராவது திடீரென விருந்தாளி வந்து விட்டாலோ அல்லது நமக்கே கூட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், டிபனுக்கு சைடிஷ் ஆக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் முதலில் ஞாபகத்துக்கு வருவது வடை தான். ஆனால் இதற்கு பருப்பு ஊற வைத்து அரைத்து என வேலை கொஞ்சம் அதிகமாக நீளும் என்பதால் பெரும்பாலும் இதை செய்ய சோம்பல் பட்டு விடுகிறோம். இனி அதற்கு அவசியமே இல்லை வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பத்தாவது நிமிடத்தில் சுடச்சுட கேரட் வடை ரெடி பண்ணிடலாம். வேர் காய்கறிகளில் பிரபலமான ஒன்றாக கேரட் உள்ளது. இந்த அற்புத காய்கறியை பச்சையாகவும், சமைத்தும் பயன் பெறலாம். எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத காயில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான வடை தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Carrot Vadai
Yield: 4 People
Calories: 25kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 5 கேரட்
  • 3/4 கப் பொட்டுக்கடலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கேரட்டை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும்.
  • பின் இந்த கேரட் கலவையுடன் பொடித்து வைத்திருந்த பொட்டு கடலை மாவையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் வடை தயார். இந்த வடையை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி வைத்தும் சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 350g | Calories: 25kcal | Carbohydrates: 6g | Protein: 5.5g | Fat: 2.47g | Sodium: 69mg | Potassium: 328mg | Fiber: 1.5g | Vitamin A: 75IU | Vitamin C: 6.22mg | Calcium: 69mg | Iron: 8.3mg

இதனையும் படியுங்கள் : ருசியான கேரட் பருப்பு சாதம் வீடே மணக்க மணக்க இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! சூப்பரான டிபன் பாக்ஸ் ரெசிபி!