மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம சிக்கன் தந்தூரி மாதிரி மீன் வச்சு மீன் தந்தூரி செய்ய போறோம் முழு மீன் வாங்கி நல்ல கழுவி சுத்தம் செஞ்சு அதுல நிறைய கோடுகள் போட்டு மசாலாக்கள் எல்லாம் சேர்த்து வாழை இலை வைத்து வேக வைத்து சாப்பிடும்போது டேஸ்ட் அமிர்தமாய் இருக்கும்.
இத நம்ம வாழை இலையில வச்சு வேகவைக்கிறதால வாழை இலையில் இருக்கிற அந்த வாசனையும் அந்த மீன்ல இறங்கி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுவரைக்கும் நீங்க இந்த மீன் தந்தூரி செஞ்சு சாப்பிட்டதில்ல அப்படின்னா கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்டா சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியா இருக்கும். மீன் குழம்பு வச்சா மீன் குழம்புக்கு இதை சைடிஷா வச்சு சாப்பிடலாம் அப்படி இல்லன்னா சும்மாவே இதை தந்தூரி மாதிரி செஞ்சு சாப்பிடலாம்.
உங்க வீட்ல விறகடுப்பு இருந்துச்சுன்னா அந்த விறகு அடுப்புல வச்சு செஞ்சு சாப்பிடுறது இன்னுமே டேஸ்டா இருக்கும். விறகு அடுப்பு இல்லாதவங்க இதை உங்க வீட்ல இருக்கிற கேஸ் அடுப்புல கூட செய்யலாம் அதுவும் டேஸ்ட்டு நல்லா தான் இருக்கும். அதுமட்டுமில்லாம இந்த மீன் தந்தூரி செய்றதுக்கு நம்ம வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே போதுமானது வெளியில நிறைய திங்ஸ் வாங்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது.
நீங்க எது வேணாலும் மறந்துடுங்க ஆனா வாழை இலையை மட்டும் மறந்துடாதீங்க வாழை இலை செஞ்சு சாப்பிட்டா மட்டும் தான் இதோட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான மீன் தந்தூரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தந்தூரி மீன் | Tandhoori Fish Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- முழு மீன்
- சீரகத்தூள்
- மஞ்சள் தூள்
- மிளகாய்த் தூள்
- மல்லி தூள்
- எலுமிச்சை பழச்சாறு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
- முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து நிறைய கோடுகள் போட்டு கொள்ளவும். அப்பொழுதுதான் நிறைய மசாலாக்கள் மீனுக்குள் சேரும்
- ஒரு வாழை இலையை எடுத்து அதனை நன்கு தீயில் வாட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் சீரகத்தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் உப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அதனை மீனில் நன்றாக படும்படி வைத்து மசாலாவை தடவிக் கொள்ளவும்
- பின்னர் அந்த மீனை வாழை இலையில் வைத்து மடித்து நூல் போட்டு கட்டி ஒரு தோசை கல் வைத்து நன்றாக வேக வைத்து எடுக்கவும். அல்லது உங்கள் வீட்டில் விறகு அடுப்பு இருந்தால் வாழை இலையின் மேல் ஒரு அலுமினிய பேப்பரை சுற்றி நேரடியாக அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான மீன் தந்தூரி தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : ருசியான நெத்திலி கருவாடு வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! வீட்ல பழைய சாதம் இருந்தா அதன் கூட சாப்பிட்டு பாருங்க இதன் ருசியே தனி தான்!