ஒரு சில பேருக்கு நான் வெஜ் தான் பைத்தியமா இருக்கும் அந்த அளவுக்கு அவங்களுக்கு நான் வெஜ் அப்படின்னாலே ரொம்ப பிடிக்கும். என்னதான் நான் வெஜ்ல மீன் முட்டை மட்டன் சிக்கன் கணவாய் இறால் அப்படின்னு நிறைய இருந்தாலும் ஒரு சிலரோட ஃபேவரட் கருவாடா தான் இருக்கும். கருவாட்டு குழம்பு வச்சு சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கமா இருக்கும் அப்படின்னு கூட சொல்லுவாங்க அந்த அளவுக்கு அவங்க எல்லாரும் கருவாட்டு குழம்பு பிரியர்களா இருப்பாங்க.
குழம்பு மட்டுமில்லாமல் கருவாடு தொக்கு கருவாடு வறுவல் நிறைய செஞ்சு சாப்பிடுவாங்க வெறுமனே சும்மா சட்டில போட்டு வதக்கி கூட எடுத்து சாப்பிடுவாங்க எப்படி சாப்பிட்டாலும் கருவாடு டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். அந்த வகையில இப்ப நம்ம நெத்திலி கருவாட்டை வச்சு ஒரு சிம்பிளான டேஸ்டான அட்டகாசமான வறுவல் தான் பாக்க போறோம். நம்ம வீட்ல பழைய சாதம் இருந்துச்சுன்னா இந்த நெத்திலி கருவாடு மட்டும் நீங்க வறுத்து வச்சா போதும் அந்த பழைய சாதம் ஃபுல்லாவே காலி ஆகிவிடும் அந்த அளவுக்கு அந்த நெத்திலி கருவாடு டேஸ்ட்டுக்கு எல்லா சாதத்தையும் சாப்பிட்டு முடிச்சிடுவாங்க.
பழைய சாதத்துக்கு மட்டுமில்லாமல் சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சுவை ரொம்பவே அருமையா இருக்கும். உங்களால சில நேரங்களில் எதுவும் பெருசா நான்வெஜ் செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுக்க முடியலன்னா இந்த நெத்திலி கருவாடு வறுவல் மட்டும் டக்குனு செஞ்சு கொடுத்திருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க பெரியவங்களுக்கு எல்லாம் இந்த நெத்திலி கருவாடு வறுவல் ரொம்பவே பிடிக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான சிம்பிளான நெத்திலி கருவாடு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
நெத்திலி கருவாடு வறுவல் | Nethili Dry Fish Fry In Tamil
Equipment
- 1 தோசை கல்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் நெத்திலி கருவாடு
- 10 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 5 பூண்டு
- 1 கொத்து கருவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் சுடு தண்ணீரில் நெத்திலி கருவாட்டை போட்டு நன்றாக ஊற வைக்கவும்.
- பிறகு கருவாட்டை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும் பிறகு கறிவேப்பிலை வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும், கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருப்பதால் பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து குறைவாக ஆகும் வரை வதக்கவும்
- பிறகு மஞ்சள்தூள் மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி விட்டு பிறகு கருவாட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே நன்றாக வதக்க வேண்டும்.
- கருவாடு நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்தால் சுவையான நெத்திலி கருவாடு வறுவல் தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கமகமனு மத்தி மீன் தொக்கு ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!