Home அசைவம் காரசாரமான ருசியில் கமகமனு மத்தி மீன் தொக்கு ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காரசாரமான ருசியில் கமகமனு மத்தி மீன் தொக்கு ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் தொக்கை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் சரியான பக்குவத்தில் நம் பாட்டி காலத்தில் செய்தது போன்ற சுவையில் பலராலும் செய்ய முடிவதில்லை. அவ்வாறு பாட்டியின் கை பக்குவத்தில் வைக்கக் கூடிய சுவையான மீன் தொக்கை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மீன்களிலேயே மிகவும் சத்தானது மட்டுமின்றி, அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டியது, இந்த மத்தி மீன். ஒருகாலத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, மத்தி மீனுக்கு இன்று டிமாண்டு கூடிவிட்டது. காரணம், மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை புரதச்சத்தும் இந்த மீனில் உள்ளதுதான்.

-விளம்பரம்-

பொதுவாக மீன் தொக்கு என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் மத்தி மீன் தொக்கு என்றால் எப்படி இருக்கும். மத்தி மீனில் அதிகம் முள் இருந்தாலும் இதன் ருசி எப்போதும் தனித்துவமாக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடக்கூடிய மீன் இது. புரதமும், அதிகப்படியான கொழுப்பும், நாம் சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை பசி உணர்வை தூண்டாது. இதனால், எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்கும். கேரளாவில் மத்தி மீன் மிகவும் பிரபலம். ஆனால் தற்போது இந்த மீன் எல்லா மாவட்டங்களிலும் கிடைக்கிறது. இன்று சூப்பரான கிராமத்து ஸ்டைல் மத்தி மீன் தொக்கு எப்படி எளிய முறையில் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

Print
3.50 from 2 votes

மத்தி மீன் தொக்கு | Mathi Meen Thokku Recipe In Tamil

கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் தொக்கை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் சரியான பக்குவத்தில் நம் பாட்டி காலத்தில் செய்தது போன்ற சுவையில் பலராலும் செய்ய முடிவதில்லை. அவ்வாறு பாட்டியின் கை பக்குவத்தில் வைக்கக் கூடிய சுவையான மீன் தொக்கை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மீன்களிலேயே மிகவும் சத்தானது மட்டுமின்றி, அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டியது, இந்த மத்தி மீன். கேரளாவில் மத்தி மீன் மிகவும் பிரபலம். ஆனால் தற்போது இந்த மீன் எல்லா மாவட்டங்களிலும் கிடைக்கிறது. இன்று சூப்பரான கிராமத்து ஸ்டைல் மத்தி மீன் தொக்கு எப்படி எளிய முறையில் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Mathi Meen Thokku
Yield: 4 People
Calories: 309kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி மத்தி மீன்
  • 2 கப் சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 4 பச்சை மிளகாய்
  • 1/4 கப் புளி கரைசல்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மத்தி மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் கடைசியாக மத்தி மீனை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடம் நன்றாக வேக வைத்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மத்தி மீன் தொக்கு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 309kcal | Carbohydrates: 3.29g | Protein: 24.7g | Fat: 2.2g | Sodium: 76.5mg | Potassium: 427mg | Vitamin A: 32IU | Vitamin C: 27.5mg | Calcium: 204mg | Iron: 2.38mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை மீன் வறுவல் இப்படி வித்யாசமாக லெமன் பெப்பர் சேர்த்து செஞ்சி பாருங்க காரசாரமான ரெசிபி!