Home அசைவம் கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா கருவாடு செஞ்சு சாப்பிடுவாங்க. கருவாடு ப்ரை, கருவாடு தொக்கு கருவாட்டு குழம்பு அப்படின்னு விதவிதமா அவங்களுக்கு புடிச்ச மாதிரி நிறைய செஞ்சு சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

ஆனா இப்போ நம்ம செய்ய போற மாதிரி ஒரு சூப்பரான ஸ்டைலில் கருவாட்டு தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்போ கருவாடு சாப்பிடணும்னு தோணுனாலும் இந்த மாதிரி ஒரு செய்முறைல தான் கருவாட்டுத் தொக்கு செஞ்சு சாப்பிடுவீங்க. அந்த அளவுக்கு இந்த கருவாட்டுத் தொக்கோட டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் இதுக்கு சைடு டிஷ் எதுவுமே தேவையில்லை கருவாட்டை கடிச்சுக்கிட்டு அப்படியே சாதத்தை சாப்பிட்டால் சொர்க்கமா இருக்கும். இந்த வெயில் காலத்துக்கு பழைய சாதம் மிஞ்சி போயிடுச்சுன்னா கூட அந்த பழைய சாதத்துக்கு இந்த கருவாட்டு தொக்க சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா பிரியாணி கூட தோத்து போய்டும் அந்த அளவுக்கு செம்ம சூப்பரா இருக்கும்.

இந்த கருவாட்டுத் தொக்க குழந்தைகளும் கூட ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க அவங்களுக்குமே இது ரொம்பவே பிடிக்கும் கருவாடு பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த கருவாட்டுத் தொக்க ஒரு தடவை சாப்பிட்டாங்கன்னா அதுக்கப்புறம் அவங்களும் கருவாட்டுத் தொக்குக்கு ரொம்பவே அடிக்ட் ஆகிடுவாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான கருவாட்டு தொக்கு தான் இது. இந்த கருவாட்டுத் தொக்க நீங்க இட்லி தோசைக்கு கூட சேர்த்து வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான கருவாட்டு தொக்கு சீக்கிரத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
3 from 1 vote

கருவாட்டு தொக்கு | Dry Fish Thokku Recipe in Tamil

ஒரு சூப்பரான ஸ்டைலில் கருவாட்டு தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க எப்போ கருவாடு சாப்பிடணும்னு தோணுனாலும் இந்த மாதிரி ஒரு செய்முறைல தான் கருவாட்டுத் தொக்கு செஞ்சு சாப்பிடுவீங்க. அந்த அளவுக்கு இந்த கருவாட்டுத் தொக்கோட டேஸ்ட் சூப்பரா இருக்கும். வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் இதுக்கு சைடு டிஷ் எதுவுமே தேவையில்லை கருவாட்டை கடிச்சுக்கிட்டு அப்படியே சாதத்தை சாப்பிட்டால் சொர்க்கமா இருக்கும். இந்த வெயில் காலத்துக்கு பழைய சாதம் மிஞ்சி போயிடுச்சுன்னா கூட அந்த பழைய சாதத்துக்கு இந்த கருவாட்டு தொக்க சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா பிரியாணி கூட தோத்து போய்டும் அந்த அளவுக்கு செம்ம சூப்பரா இருக்கும். இந்த கருவாட்டுத் தொக்க குழந்தைகளும் கூட ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time9 minutes
Active Time15 minutes
Total Time24 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Yield: 5
Calories: 128kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் கருவாடு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 5 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கருவாட்டை சுடு தண்ணீரில் சேர்த்து நன்றாக இரண்டு முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு பூண்டை சிறிதாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  • வெங்காயம் பூண்டு இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக மசிய வதக்கிக் கொள்ளவும்.
  • அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சிக்கன் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
  • ஐந்து நிமிடங்களுக்கு பிறகு கருவாட்டை சேர்த்து நன்றாக சுருள வதக்கி கருவாடு வெந்ததும் இறக்கினால் சுவையான கருவாட்டுத் தொக்கு தயார்

Nutrition

Serving: 100g | Calories: 128kcal | Carbohydrates: 33.3g | Protein: 13g | Sodium: 22mg | Potassium: 186mg

இதையும் படியுங்கள் : ருசியான நெத்திலி கருவாடு வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! வீட்ல பழைய சாதம் இருந்தா அதன் கூட சாப்பிட்டு பாருங்க இதன் ருசியே தனி தான்!

-விளம்பரம்-