அடுத்தமுறை மீன் வறுவல் இப்படி வித்யாசமாக லெமன் பெப்பர் சேர்த்து செஞ்சி பாருங்க காரசாரமான ரெசிபி!

- Advertisement -

அசைவ உணவுகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவானது கடல் உணவுகள் அதிலும் முக்கியமாக மீனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த மீனை பொறுத்தவரை நாம்  குழம்பு,பிரியாணி, புட்டு  இவைகள் எல்லாம் விரும்பி உண்பதை விட வறுவல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த மீன் உணவு என்றால் அது வறுவல் தான்.  அப்படிப்பட்ட மீனை லெமன் பெப்பர் வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். உணவில் பிரதானம் சுவையாக  உண்ண வேண்டும் என்பதுதான். நாம் இந்த லெமன் பெப்பர் வறுவலை செய்ய இருக்கிறோம். மீன் குழம்பு அதிக சுவையுடையதாகத்தான் இருக்கும். ளோஎஆமீன் பிரியாணியும்  பிடித்தவர்களுக்கும் மீன் எப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்கும். இருந்தாலும் மீன் வறுவலுக்கு என்று தனியாக ஒருக கூட்டமே இருக்கின்றது .மீனில் இருக்கும் ஒமேகா 3 கால்சியம் வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியவை. இவைகளில் கெட்ட கொழுப்புகள் இல்லாததால் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதய நோயாளிகள் கூட மீன் உணவை உணவில் எடுத்து கொள்ளலாம். இந்த லெமன் பேப்பர் மீன் வறுவலை எந்த மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வஞ்சரம் மீனில் செய்யலாம்.

- Advertisement -

முள் இல்லாத மீன் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் இருக்கும்.அசைவ உணவு விருந்தென்றால் அதில் மீன் இல்லாமல் இருக்கவே இருக்காது அப்படிப்பட்ட மீனில் நீங்கள் லெமன் பெப்பர் வறுவல் செய்து கொடுத்தீர்கள் என்றால் வந்த விருந்தினர்களும் குடும்பத்தினர்களும் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட லெமன் பெப்பர் சுலபமாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப குறைவான நேரத்தில் டேஸ்டியான மீன் வறுவல் எப்படி செய்து சாப்பிடலாம்.எப்படி லெமன், பெப்பர் சேர்த்து மீன் வறுவல் செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

லெமன் பெப்பர் மீன் வறுவல் | Lemon Pepper Fish Fry

குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். உணவில் பிரதானம் சுவையாக  உண்ணவேண்டும் என்பதுதான். நாம் இந்த லெமன் பெப்பர் வறுவலை செய்ய இருக்கிறோம். மீன் குழம்பு அதிக சுவையுடையதாகத்தான் இருக்கும். மீன் பிரியாணி பிடித்தவர்களுக்கும் மீன் எப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்கும். இருந்தாலும் மீன் வறுவலுக்கு என்று தனியாக ஒருக கூட்டமே இருக்கின்றது .மீனில் இருக்கும் ஒமேகா 3 கால்சியம் வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியவை. இவைகளில் கெட்ட கொழுப்புகள் இல்லாததால் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதய நோயாளிகள் கூட மீன் உணவை உணவில் எடுத்து கொள்ளலாம். இந்த லெமன் பேப்பர் மீன் வறுவலை எந்த மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். வஞ்சரம் மீனில் செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Lemon Pepper Fish Fry
Yield: 4
Calories: 124kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ வஞ்சிரம் மீன்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் லெமன் சாறு
  • 1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 3 ஸ்பூன் மிளகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி தேவையான அளவு
  • 2 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு எண்ணெய் சேர்க்காமல்  பொன்னிறமாகவறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.மிளகு ,  பெருஞ்சீரகம்ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  • ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த மிளகு பொடி, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையில் மீன் துண்டுகளை எடுத்து கலவையில் நன்கு இரண்டு பக்கமும் தடவி  அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கறிவேப்பிலைபோட்டு பொரிந்ததும மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
  • பின் வறுத்த மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து  மேலேலெமன் சாறு ஊற்றி வெங்காயம் வைத்து பரிமாறினால் சூடான சுவையான நாவில் நீர் சுரக்கும் லெமன் மிளகு வறுவல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 124kcal | Carbohydrates: 20.6g | Fat: 4g | Cholesterol: 40mg | Sodium: 76.5mg | Potassium: 427mg | Fiber: 0.2g | Vitamin A: 31IU | Calcium: 52mg | Iron: 2.38mg