ஆரோக்கியத்தை அள்ளிக் தரும் தேங்காய் பூ மில்க் ஷேக் போட்டுக் கொடுத்தா குழந்தைகள் சமத்தா குடிச்சிடுவாங்க!
மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை ச
மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது.
மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக தேங்காய் பூவினைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். தேங்காய் பூவில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. வாய் முதல் குடல் புண்கள் வரை ஆற்றும் தன்மை கொண்டது. கால்சியம் அதிகம் உள்ளது.
உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. தேங்காய் பூவில் அதிக அளவில் புரதம் உள்ளது. இது உடலுக்கு வலிமை கிடைக்கவும், எளிதில் ஜீரணமாகவும், மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். மில்க் ஷேக் பலவிதமான சுவைகளில் கிடைக்கிறது. மில்க் ஷேக் குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கடைக்கோ, உணவு விடுதிக்கோ, பேக்கரிகளுக்கோ சென்றால் தான் குடிக்க முடியும் என்ற அவசியம் இல்லை. சரி, இப்போது தேங்காய் பூ மில்க் ஷேக்கை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம்.