மில்க் ஷேக் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு பானம். பால் விரும்பி குடிக்காத குழந்தைகள் கூட அந்த பாலினை மில்க் ஷேக் ஆக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது.
மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக தேங்காய் பூவினைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். தேங்காய் பூவில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. வாய் முதல் குடல் புண்கள் வரை ஆற்றும் தன்மை கொண்டது. கால்சியம் அதிகம் உள்ளது.
உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. தேங்காய் பூவில் அதிக அளவில் புரதம் உள்ளது. இது உடலுக்கு வலிமை கிடைக்கவும், எளிதில் ஜீரணமாகவும், மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். மில்க் ஷேக் பலவிதமான சுவைகளில் கிடைக்கிறது. மில்க் ஷேக் குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கடைக்கோ, உணவு விடுதிக்கோ, பேக்கரிகளுக்கோ சென்றால் தான் குடிக்க முடியும் என்ற அவசியம் இல்லை. சரி, இப்போது தேங்காய் பூ மில்க் ஷேக்கை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம்.
தேங்காய் பூ மில்க் ஷேக் | Coconut Flower Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 தேங்காய் பூ
- 1 கப் பால்
- 6 ஐஸ் கட்டிகள்
- சர்க்கரை தேவையான அளவு
- 6 பேரிச்சம்பழம்
- பாதாம் தேவையான அளவு
- முந்திரி தேவையான அளவு
செய்முறை
- முதலில் தேங்காய் பூவை நான்கு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின்னர் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்.ஆறிய பால், தேவையான அளவு சர்க்கரை மற்றும் பேரிச்சம்பழத்தை தேங்காய் பூவுடன் சேர்த்து மறுமுறை அரைத்துக் கொள்ளவும்.
- பின்பு இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளவும்.
- அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான தேங்காய் பூ மில்க் ஷேக்தயார்.