பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக வேலைகளை செய்யாமலும் இருக்க முடியாது. பெண்களுக்கு பெரும் பாலும் ரேத்த சோகை உள்ளது அதனால் எப்போது சோர்வாக இருக்கும்.. வேலை நினைத்தது போல் செய்ய முடியாது. இந்த செய்து தானும் சாப்பிட்டு வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுங்கள்.. உடலுக்கு ஆரோக்கியமானது.பீட்ரூட்டை உட்கொள்வது இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகுந்த பயனை தருகிறது. பீட்ரூட்டில் உள்ள வைட்டமின்-B, ஜிங்க், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள கலோரிகள் அளவு மிகக் குறைவு.
மாறிவரும் பருவத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்க இதுபோன்ற பழச்சாறுகளை காய்கறி சாறுகளை குடிக்கவும். இன்றைய பதிவில், இந்த அழகான நிறமுடைய, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டைப் பயன்படுத்தி மூன்று அற்புதமான பீட்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம். வாங்க பார்ப்போம்.
பீட்ரூட் மில்க் ஷேக் | Beetroot Milk Shake Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் பால்
- 2 பீட்ரூட்
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
- தேன் தேவையான அளவு
செய்முறை
- பீட்ரூட்டைத்தோல் சீவி நறுக்கி, ஒரு குக்கரில் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- பிறகு, பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு மிக்ஸியில் பால், தேன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு அரைத்த பீட்ரூட்டைப் தேவையான அளவு பாலில் சேர்த்து. ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்தெடுத்தால், பீட்ரூட் மில்க் ஷேக் தயார்.