இனிமேல் தோசைக்கு சட்னி அரைக்காமல் இந்த மாதிரி தேங்காய் பூண்டு பொடி செஞ்சு பாருங்க!!
எப்பவுமே நம்ம வீட்ல இட்லி தோசை அடிக்கடி செஞ்சிட்டே இருப்போம். இட்லி தோசைக்கு மாவு இல்லாத வீடு இருக்காது. பிரிட்ஜ் குள்ள காய்கறி இருக்கோ இல்லையோ கண்டிப்பாக ஒரு வாளியில் மாவு இருக்கும். இட்லி தோசைக்கு நம்ம சைடு டிஷ் ஆக தேங்காய் சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி, கதம்ப சட்னி,சாம்பார்
எப்பவுமே நம்ம வீட்ல இட்லி தோசை அடிக்கடி செஞ்சிட்டே இருப்போம். இட்லி தோசைக்கு மாவு இல்லாத வீடு இருக்காது. பிரிட்ஜ் குள்ள காய்கறி இருக்கோ இல்லையோ கண்டிப்பாக ஒரு வாளியில் மாவு இருக்கும். இட்லி தோசைக்கு நம்ம சைடு டிஷ் ஆக தேங்காய் சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி, கதம்ப சட்னி,சாம்பார், குருமா அப்படின்னு எக்கச்சக்கமான சைட் டிஷ் வச்சு சாப்பிட்டிருப்போம். அப்படி சட்னி சாம்பார் பிடிக்காதவங்க இட்லி பொடி வச்சு கூட சாப்பிட்டு இருப்பீங்க.
ஆனா இன்னைக்கு நம்ம இட்லி பொடியும் இல்லாம சட்னி சாம்பாரும் இல்லாம இட்லி தோசைக்கு ஒரு சூப்பரான சைடு டிஷ் ஆக இருக்கக்கூடிய தேங்காய் பூண்டு பொடி பார்க்க போறோம் இந்த ரெசிபி இட்லி தோசைக்கு அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் தான் தேவைப்படும் வெறும் நான்கு பொருள் வைத்து ஒரு சூப்பரான சைட் டிஷ் செய்யலாம். இதனை சைடு டிஷ்ஷாக மட்டுமில்லாமல் தோசை மேல் தூவி விட்டு தேங்காய் பூண்டு பொடி தோசையாக செய்யலாம் கண்டிப்பாக வீட்டில் இருக்கக்கூடிய எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு நல்லெண்ணெய் ஊத்தி கலந்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். சுட சுட சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்த பொடி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. அஞ்சு நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். இதுக்கு பூண்டு உரிக்கவே தேவையில்லை அதனால சட்டுன்னு செஞ்சுடலாம். இப்ப வாங்க இந்த சுவையான ஈஸியான தேங்காய் பூண்டு பொடி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வேர்க்கடலை பொடி செஞ்சு பாருங்க ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடலாம்!!