நம்ம வீட்ல அடிக்கடி செய்றது இட்லி, தோசை தான் இந்த டிபன் தான் எல்லாரோட வீட்லயுமே அடிக்கடி இருக்கும். அப்படியே அடிக்கடி செய்ற இந்த டிபன் ரெசிபிஸ்க்கு கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது சைடு டிஷ் இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு தோணும். தக்காளி சட்னி தேங்காய் சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி, சாம்பார் குருமா சிக்கன் குழம்பு மட்டன் குழம்பு நிறைய ரெசிபிஸ் இட்லிக்கு காம்பினேஷனா இருந்தாலும் ரொம்ப ரொம்ப சிம்பிளாக ஏதாவது சாப்பிடணும் அப்படின்னா இட்லி பொடி அரைத்து சாப்பிடுவாங்க அப்படி எப்பவுமே அந்த இட்லி பொடியா அரைச்சு சாப்பிடாம அதுகூட வேர்கடலை சேர்த்து ஒரு சூப்பரான வேர்க்கடலை பொடி செஞ்சு சாப்பிடுங்க.
வேர்க்கடலை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்னு அந்த வகையில இந்த மாதிரி வேர்க்கடலை பொடி செஞ்சு அது கூட நல்லெண்ணெய் ஊத்தி இட்லிக்கு சைடிஷா வச்சு சாப்பிட்டு பாருங்க ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடலாம். இட்லிக்கு மட்டும் இல்லாம தோசைக்கு கூட இந்த வேர்க்கடலை பொடியை சாப்பிடலாம். அவ்ளோ ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருமே அடிமையா வாங்க. எங்கையாவது அவசர அவசரமாக கிளம்பும்போது வேர்க்கடலை பொடி இருந்துச்சுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். டேஸ்ட்டான இந்த வேர்க்கடலை பொடி ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல செஞ்சு ஒரு மாசத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க.
வேர்க்கடலையை நல்ல சிவக்க சிவக்க வறுத்து லைட்டா கருப்பு ஆனா உடனே எடுத்து ஆற வச்சு அப்படியே அரைச்சுக்கிட்டே இருக்காம கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு பொடியா அரைக்கணும் இல்லனா வேர்க்கடலையில் இருக்கிற எண்ணெய் பிரிந்து வந்து கொஞ்சம் நல்லா இல்லாம போயிடும். கொஞ்சம் பக்குவமா இதே செய்முறையில கொரகொரப்பா அரைச்சு ஒரு கண்ணாடி டப்பால போட்டு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க உங்களுக்கு உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும் அதே நேரத்தில் நேரத்தையும் மிச்சபடுத்தி கொடுக்கும். நீங்க வீட்ல செய்ற பொடி இட்லி பொடி மினி இட்லி பொடி தோசை எல்லாத்துக்குமே இந்த வேர்க்கடலை பொடிய பயன்படுத்தி பாருங்க டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்ட்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வேர்க்கடலை பொடி | Peanut Podi Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 100 கி வேர்க்கடலை
- 25 கி கடலை பருப்பு
- 25 கி உளுந்தம் பருப்பு
- 15 வர மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- 1 துண்டு புளி
- 2 டேபிள் ஸ்பூன் சீரகம்
- 2 டேபிள் ஸ்பூன் மல்லி
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
செய்முறை
- முதலில் வேர்க்கடலையை ஒரு கடாயில் சேர்த்து 10 நிமிடம் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
- பிறகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் மல்லி விதைகள் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
- பெருங்காயம் தூள் காய்ந்த மிளகாய் சேர்த்து கல் உப்பு சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து இதனை முதலில் அரைத்து கொள்ளவும்.
- இறுதியாக வேர்க்கடலையை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்தால் சுவையான வேர்கடலை பொடி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கரம் மசாலா பொடி செய்வது எப்படி