Advertisement
சைவம்

ருசிக்க ருசிக்க அருமையான தேங்காய் பால் பருப்பு பாயாசம் எளிதாக இப்படி வீட்டில் செய்து அசத்தலமே!

Advertisement

நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம்னு வந்தா நம்ம ஃபர்ஸ்ட் செய்றது ஸ்வீட் தான். விசேஷம் மட்டுமில்லாம நம்ம வீட்ல யாருக்காவது பிறந்தநாள் கல்யாண நாளில் வந்தாலும் நம்ம ஸ்வீட் தான் பர்ஸ்ட் செய்வோம். ஸ்வீட் செஞ்சு சாமிக்கு படச்சுட்டு தான் நம்ம சாப்பிடுவோம். நம்ம பொதுவா கேசரி பால் பாயாசம் எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் தான் செஞ்சு சாப்பிடுவோம்.

ஆனா ஒரு தடவை இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுவையும் அருமையா இருக்கும் அதே நேரத்தில் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம் நவராத்திரி ஸ்பெஷலான ஒரு ஸ்வீட். நவராத்திரி ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள் இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம் செஞ்சா அவ்வளவு சிறப்பு.

Advertisement

பாயாசத்துல நம்ம பொதுவா வைக்கிறது பால் பாயாசம் தான் ஆனா அதையும் தாண்டி தனித்தனியா சீமையா பாயாசம் ஜவ்வரிசி பாயாசம் அவல் பாயசம்னு வெச்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் யாருமே இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசத்தை முயற்சி செஞ்சு பார்த்திருக்க மாட்டோம்.

அடுத்து உங்க வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் வந்தாலோ இல்ல உங்க குழந்தைகளுக்கு பிறந்தநாள் உங்களுக்கு கல்யாண நாள் அந்த மாதிரி ஏதாவது ஒரு ஸ்பெஷலான விசேஷங்கள் உங்க வீட்ல வந்துச்சுனா இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசத்தை செஞ்சு குடுங்க அந்த விசேஷம் இன்னும் அழகானதா மாறிடும். ரொம்பவே எளிமையான முறையில் சுலபமா செய்யக்கூடிய இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

தேங்காய் பால் பருப்பு பாயாசம் | Coconut Milk Dal Payasam

Print Recipe
பாயாசத்துலநம்ம பொதுவா வைக்கிறது பால் பாயாசம் தான் ஆனா அதையும் தாண்டி தனித்தனியா சீமையா பாயாசம்ஜவ்வரிசி பாயாசம் அவல் பாயசம்னு வெச்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால்
Advertisement
யாருமே இந்த தேங்காய்பால் பருப்பு பாயாசத்தை முயற்சி செஞ்சு பார்த்திருக்க மாட்டோம். அடுத்து உங்க வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் வந்தாலோ இல்ல உங்க குழந்தைகளுக்கு பிறந்தநாள் உங்களுக்கு கல்யாண நாள் அந்த மாதிரி ஏதாவது ஒரு ஸ்பெஷலான விசேஷங்கள் உங்க வீட்ல வந்துச்சுனா இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசத்தை செஞ்சு குடுங்க அந்த விசேஷம் இன்னும் அழகானதா மாறிடும்.ரொம்பவே எளிமையான முறையில் சுலபமா செய்யக்கூடிய இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம்எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Advertisement
Course deserts
Cuisine tamil nadu
Keyword Coconut Milk Dal Payasam
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் தேங்காய்ப் பால்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 2 கப் பாசிப்பருப்பு
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 கப் வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 10 முந்திரி

Instructions

  • முதலில் பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேகவைத்துஎடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வெள்ளத்தை போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி கை போட்டு பொன்னிறமாக ஆக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
     
  • அதே பாத்திரத்தில் வெல்லக்கரைசல் மற்றும் வேக வைத்துள்ள பருப்புகளை போட்டு நன்றாக கிளறவும்.
  • பிறகு அதில்ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் சேர்ந்து ஒரு கொதி வந்தவுடன் அதில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி கலக்க வேண்டும்.
  • மறுபடியும் ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து இறக்கினால் தேங்காய் பால்பருப்பு பாயாசம் சுட சுட தயார்

Notes

இதே மாதிரி உங்கள் வீட்டிலும் செய்து கொடுத்து அசத்துங்கள்.

Nutrition

Serving: 300g | Carbohydrates: 43g | Cholesterol: 12mg | Sodium: 234mg | Potassium: 232mg | Sugar: 8.2g | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் சேர்த்த பருப்பு பாயாசம் இப்படி செய்து சாப்பட கொடுங்க அமிர்தமாக இருக்கும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

12 நிமிடங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

3 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

4 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

8 மணி நேரங்கள் ago