ருசிக்க ருசிக்க அருமையான தேங்காய் பால் பருப்பு பாயாசம் எளிதாக இப்படி வீட்டில் செய்து அசத்தலமே!

- Advertisement -

நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம்னு வந்தா நம்ம ஃபர்ஸ்ட் செய்றது ஸ்வீட் தான். விசேஷம் மட்டுமில்லாம நம்ம வீட்ல யாருக்காவது பிறந்தநாள் கல்யாண நாளில் வந்தாலும் நம்ம ஸ்வீட் தான் பர்ஸ்ட் செய்வோம். ஸ்வீட் செஞ்சு சாமிக்கு படச்சுட்டு தான் நம்ம சாப்பிடுவோம். நம்ம பொதுவா கேசரி பால் பாயாசம் எப்பவுமே ஒரே மாதிரியான ஸ்வீட் தான் செஞ்சு சாப்பிடுவோம்.

-விளம்பரம்-

ஆனா ஒரு தடவை இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுவையும் அருமையா இருக்கும் அதே நேரத்தில் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம் நவராத்திரி ஸ்பெஷலான ஒரு ஸ்வீட். நவராத்திரி ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள் இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம் செஞ்சா அவ்வளவு சிறப்பு.

- Advertisement -

பாயாசத்துல நம்ம பொதுவா வைக்கிறது பால் பாயாசம் தான் ஆனா அதையும் தாண்டி தனித்தனியா சீமையா பாயாசம் ஜவ்வரிசி பாயாசம் அவல் பாயசம்னு வெச்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் யாருமே இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசத்தை முயற்சி செஞ்சு பார்த்திருக்க மாட்டோம்.

அடுத்து உங்க வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் வந்தாலோ இல்ல உங்க குழந்தைகளுக்கு பிறந்தநாள் உங்களுக்கு கல்யாண நாள் அந்த மாதிரி ஏதாவது ஒரு ஸ்பெஷலான விசேஷங்கள் உங்க வீட்ல வந்துச்சுனா இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசத்தை செஞ்சு குடுங்க அந்த விசேஷம் இன்னும் அழகானதா மாறிடும். ரொம்பவே எளிமையான முறையில் சுலபமா செய்யக்கூடிய இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

Print
No ratings yet

தேங்காய் பால் பருப்பு பாயாசம் | Coconut Milk Dal Payasam

பாயாசத்துலநம்ம பொதுவா வைக்கிறது பால் பாயாசம் தான் ஆனா அதையும் தாண்டி தனித்தனியா சீமையா பாயாசம்ஜவ்வரிசி பாயாசம் அவல் பாயசம்னு வெச்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் யாருமே இந்த தேங்காய்பால் பருப்பு பாயாசத்தை முயற்சி செஞ்சு பார்த்திருக்க மாட்டோம். அடுத்து உங்க வீட்ல ஏதாவது ஒரு விசேஷம் வந்தாலோ இல்ல உங்க குழந்தைகளுக்கு பிறந்தநாள் உங்களுக்கு கல்யாண நாள் அந்த மாதிரி ஏதாவது ஒரு ஸ்பெஷலான விசேஷங்கள் உங்க வீட்ல வந்துச்சுனா இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசத்தை செஞ்சு குடுங்க அந்த விசேஷம் இன்னும் அழகானதா மாறிடும்.ரொம்பவே எளிமையான முறையில் சுலபமா செய்யக்கூடிய இந்த தேங்காய் பால் பருப்பு பாயாசம்எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Coconut Milk Dal Payasam
Yield: 4

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் தேங்காய்ப் பால்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 2 கப் பாசிப்பருப்பு
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 கப் வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 10 முந்திரி

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேகவைத்துஎடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வெள்ளத்தை போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி கை போட்டு பொன்னிறமாக ஆக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
     
  • அதே பாத்திரத்தில் வெல்லக்கரைசல் மற்றும் வேக வைத்துள்ள பருப்புகளை போட்டு நன்றாக கிளறவும்.
  • பிறகு அதில்ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் சேர்ந்து ஒரு கொதி வந்தவுடன் அதில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி கலக்க வேண்டும்.
  • மறுபடியும் ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து இறக்கினால் தேங்காய் பால்பருப்பு பாயாசம் சுட சுட தயார்

செய்முறை குறிப்புகள்

இதே மாதிரி உங்கள் வீட்டிலும் செய்து கொடுத்து அசத்துங்கள்.

Nutrition

Serving: 300g | Carbohydrates: 43g | Cholesterol: 12mg | Sodium: 234mg | Potassium: 232mg | Sugar: 8.2g | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் சேர்த்த பருப்பு பாயாசம் இப்படி செய்து சாப்பட கொடுங்க அமிர்தமாக இருக்கும்!

-விளம்பரம்-