ருசியான தேங்காய்ப்பால் புலாவ் இப்படி செஞ்சி பாருங்கள்! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல

By Prem Kumar · 12/11/2023

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.

புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது தேங்காய் பால் புலாவ். தேங்காய்ப்பால் புலாவ் மிகவும் சுவையான மதிய உணவு வகை. இது டிபன் பாக்ஸ்கும் ஏற்ற உணவாகும், விரைவில் செய்யக்கூடியது, காய்கறிகள் மற்றும் தேங்காய் பால் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேங்காய்ப்பால் வெஜிடபிள் புலாவ் பாசுமதி அரிசி, தேங்காய் பால், விருப்பமான காய்கறிகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒரு கிளாஸ் புதிய தேங்காய் பால் குடிப்பது உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது, குறிப்பாக கோடை காலங்களில். சாதாரணமாக புலாவ் செய்வது மிகவும் எளிது. அதிலும் இது காலை வேளையில் பள்ளிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செய்து எடுத்துச் செல்ல ஈஸியான ஒரு ரெசிபி. தேங்காய் பால் புலாவை எளிதாகவும் சுவையாகவும் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full