பல காய்கறிகளை சேர்த்து இப்படி தேங்காய் பால் பலகறி குழம்பு செஞ்சி பாருங்கள்!

பல காய்கறிகளை சேர்த்து சுவையான தேங்காய் பால் பல கறி குழம்பு செய்ய போகிறோம். தேங்காய் பால் சேர்த்து பல காய்கறிகளை போட்டு இந்த குழம்பு செய்வதால் இது மிகவும் சத்துள்ள குழம்பும் ஆரோக்கியமான குழம்பாகவும் இருக்க போகிறது. அதுவும் தேங்காய் பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப் புண், வாய் புண

By ·

பல காய்கறிகளை சேர்த்து சுவையான தேங்காய் பால் பல கறி குழம்பு செய்ய போகிறோம். தேங்காய் பால் சேர்த்து பல காய்கறிகளை போட்டு இந்த குழம்பு செய்வதால் இது மிகவும் சத்துள்ள குழம்பும் ஆரோக்கியமான குழம்பாகவும் இருக்க போகிறது. அதுவும் தேங்காய் பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப் புண், வாய் புண் , தொண்டையில் இருக்கும் புண்கள்,  உடல் சூடு போன்றவற்றை குறைக்க உதவும். தேங்காயில் இருக்கின்ற நல்ல கொழுப்புகள் உடலுக்கு நல்ல சக்தியை கொடுக்க இருக்கின்றன.

உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை எல்லாம் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சத்தான சுவையான தேங்காய் பால் பலக்கறி குழம்பு சாதத்திற்கும் ,சப்பாத்திக்கும், தோசைக்கும், இட்லிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.  நிறைய பேருக்கு இந்த காய்கறிகள் என்றால் பிடிக்காது ஆனால் இது போன்ற சுவையான தேங்காய் பால் குழம்பு வைத்து கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி உண்பார்கள்.

இந்த பல காய்கறி குழம்பில் காய்கறிக்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான அசைவங்களையும் கூட சேர்த்து நீங்கள் செய்யலாம். வேண்டுமென்றால் இந்த காய்கறி குழம்பில் முட்டையை உடைத்து ஊற்றி தேங்காய் பால் முட்டை குழம்பாக கூட நீங்கள் செய்து சாப்பிடலாம். ஆனால் நாம் இப்பொழுது சைவ குழம்பு வகையில் இதை வைக்க இருக்கிறோம். இந்த சைவ குழம்பு   அசைவ குழம்பு சுவையில் இருக்கும். காய்கறிகள் அனைத்தும் நன்றாக தேங்காய் பாலில் வேகும் பொழுது இரண்டு சத்துக்களும் இரண்டற கலந்து உடலுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும். இப்பொழுது இந்த தேங்காய் பால் பலக்கறி குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full