விளக்கு திரியின் நிறங்களும் அதற்கான பலன்களும்!!

தினமும் வீட்டில் காலை மாலை என இரு நேரங்களிலும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுவது சிறப்பானது. மேலும் செவ்வாயில் வெள்ளி போன்ற நாட்களில் குத்துவிளக்கு ஏற்றுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும். அப்படி ஏற்றப்படும் விளக்கில் நாம் பயன்படுத்தும் திரிகளின் நிறங்களை பொறுத்து அதற்கா

By Prem Kumar · 3/8/2025

தினமும் வீட்டில் காலை மாலை என இரு நேரங்களிலும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுவது சிறப்பானது. மேலும் செவ்வாயில் வெள்ளி போன்ற நாட்களில் குத்துவிளக்கு ஏற்றுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும். அப்படி ஏற்றப்படும் விளக்கில் நாம் பயன்படுத்தும் திரிகளின் நிறங்களை பொறுத்து அதற்கான பலன்கள் மாறுபடும் அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிலில் பார்க்கலாம்.

சிவப்பு நிற திரி

சிவப்பு நிற திரியால் துர்க்கை அம்மன் லட்சுமி தேவி போன்ற தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் சிறப்பானது. வெற்றியை ஈர்க்கக் கூடியது செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கடன் தொல்லை உள்ளவர்கள் இந்த திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். திருமண தடைகளை நீக்கவும் சிவப்பு நிற திரி உதவும்.

வெள்ளை நிற திரி

அனைத்து விதமான காரியங்களுக்கும் மன அமைதிக்கும் செல்வ செழிப்புக்கும் வெள்ளை நிற பஞ்சு திரி வைத்து விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. வெள்ளை நிற திரி வைத்து விளக்கு ஏற்றுவது நேர்மறை ஆற்றலை கொடுக்கும். அனைத்து வீடுகளிலும் வெள்ளை நிற திரி வைத்து தான் விளக்கு ஏற்றுவார்கள்.

நீல நிற திரி

சனிக்கிழமை சனீஸ்வர பகவானை வழிபாடு செய்யும் பொழுது நீல நிற திரியை பயன்படுத்தினால் கஷ்டங்கள் தடைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நீல நிற திரி வைத்து விளக்கு ஏற்றலாம்.

மஞ்சள் நிற திரி

குரு பகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள் இந்த மஞ்சள் நிற திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றி வந்தால் கல்வி ஞானம் செல்வம் மற்றும் சுபகாரியங்களுக்கு சிறந்ததாக அமையும். வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிறத்திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றி வந்தால் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கருப்பு நிற திரி

தீய சக்திகளில் இருந்து நம்மை பாதுகாக்கவும் எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கும், கருப்பு நிற திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். சில சிறப்பு சடங்குகள் அல்லது பரிகாரங்கள் செய்யும் போது மட்டுமே கருப்பு நிற திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றுவார்கள். பெரும்பாலானோர் கருப்பு நிற திரியை பயன்படுத்துவது கிடையாது.

தாமரை தண்டு திரி

லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வீட்டில் செல்வங்கள் பெருக முற்பிறவி பாவங்கள் நீங்க இந்த தாமரை தண்டு திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவியாரின் படத்திற்கு முன்பாக தாமரை தண்டு திரி போட்ட தீபம் ஏற்றினால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

பச்சை நிற திரி

பச்சை நிறத்தில் புதன் பகவானுக்கு உரியது இந்த திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றி வந்தால் வியாபாரம் அறிவு திறன் கல்வி அனைத்துமே மேம்படும். புதன்கிழமைகளில் இந்த திரியை போட்டு தீபம் ஏற்றி வர நிச்சயமாக நல்லதே நடக்கும்.

சாஸ்திரங்களின் படி நிர்ணயிக்கப்பட்ட இந்த திரிகளின் பலன்களை புரிந்து கொண்டு தீபங்களை ஏற்றி அதன் பலன்களை பெற்றுக் கொள்ளலாம். விளக்கு ஏற்றி முடித்த பிறகு அந்த திரிகளை குப்பையில் போடக்கூடாது சாம்பிராணி போடும் போது அது சேர்த்து திரிகளை எரித்து தூபம் போட வேண்டும்.

இதனையும் படியுங்கள் : தங்க மோதிரம் விரல்களில் அணிவதால் ஏற்படும் பலன்கள்!!

Recipes AMP · Quick view
View full