தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தையும் மகாலட்சுமி தேவியாருடைய அருளையும் கொடுக்கும். தங்கம் ஜோதிட ரீதியாக சூரியன் மற்றும் குருபகவானுடன் தொடர்புடைய இதனை விரல்களில் அணிவதால் பல வகையான நன்மைகள் நடக்கும். மேலும் கிரகத்தின் ஆற்றலை அதிகரிக்கவும் அல்லது சமன் செய்யவும் தங்க மோதிரம் உதவும்.ஜோதிட ரீதியாக இந்த மோதிரத்தை ஒவ்வொரு விரலில் அணிவதன் மூலம் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது. ஜோதிட சாஸ்திரங்களின்படி தங்க மோதிரத்தை ஒவ்வொரு விரல்களிலும் அணிவதால் ஏற்படும் பலன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கட்டை விரல்
கட்டை விரலில் மோதிரம் அணிவது ஜோதிட ரீதியாக சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையது. ஆனால் சில நேரங்களில் கட்டை விரலில் தங்க மோதிரம் அணிவது நல்ல பலன்களை குறைத்து அசுப பலன்களை அதிகரிக்கச் செய்யும். ஒரு சில சந்தர்ப்பங்களில் ஜோதிடர்கள் தசா புத்திகளுக்கு ஏற்ப இதனை பரிந்துரைப்பார்கள்.
ஆட்காட்டி விரல்
ஆட்காட்டி விரலில் மோதிரம் அணிவது குரு பகவானுடன் தொடர்புடையது. இந்த விரலில் தங்க மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குரு பகவான் அதிர்ஷ்டத்தின் அதிபதியாக விளங்க கூடியவர் என்பதால் நிதிநிலை மேம்படும் செல்வ வளம் பெருகும். இந்த விரலில் மோதிரம் அணிபவர்களுக்கு ஞானம் அதிகரிக்கும் அறிவு மேம்படும். கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.
நடுவிரல்
நடு விரலில் மோதிரம் அணிவது சனிபகவானுடன் தொடர்புடையது. நடு விரலில் ஒரு சிலர் மோதிரம் அணிய விரும்ப மாட்டார்கள் ஏனெனில் சனி பகவான் பல சமயங்களில் தடைகளையும் சவால்களையும் கொடுக்கக் கூடியவர். ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் பலவீனமாக இருந்தால் அதனை சமன் செய்ய நடுவிரலில் தங்கம் அணியலாம். ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் பலவீனமாக இருந்தால் அதனை சமையல் செய்ய நடுவிரலில் தங்க மோதிரம் அணியலாம் ஆனால் நிபுணர்களின் ஆலோசனையோடு செய்ய வேண்டும். மேலும் நடுவிரலில் தங்க மோதிரம் அணிவது ஒரு சிலருக்கு தேவையற்ற மன உளைச்சலையும் சோர்வையும் தரும்.
மோதிர விரல்
மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது சூரிய பகவானுடன் தொடர்புடையது. இந்த விரலில் மோதிரம் அணிவதால் ஆரோக்கியம் ஆற்றல் மற்றும் உயிர் சக்தி கிடைக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தன்னம்பிக்கை நேர்மறையான எண்ணங்கள் அனைத்தும் அதிகரிக்கும். தந்தையுடன் நல்லிணக்கம் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் வெற்றி அதிகரிக்கும் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
சுண்டு விரல்
சுண்டு விரலில் மோதிரம் அணிவது புதன் கிரகத்துடன் தொடர்புடையது. இந்த விரலில் தங்கம் அணிவது பெண்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். தகவல் தொடர்பு புத்திசாலித்தனம் மற்றும் வணிகத்திற்கு அதிபதியான புதன் பகவானால் நிறைய நன்மைகள் கிடைக்கும். தகவல் தொடர்பு திறன் அதிகரிக்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் கல்வி நுண்ணறிவு போன்றவற்றில் திறன் மேம்படும். புதன் பகவான் பலவீனமாக இருப்பவர்களுக்கு சுண்டு விரலில் தங்கம் அணிவது தோல்விகளை தவிர்க்கும்.
இதனையும் படியுங்கள் : வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் பலன்கள்!!




