வெள்ளி ஒரு குளிர்ச்சியான உலோகம் என்பதால் உடல் சூட்டை குறைத்து உடலை சமநிலைப்படுத்தும். பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் உடல் வெப்பம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல் எரிச்சல் தலைவலி போன்றவை சரியாகும் ஆயுர்வேத நம்பிக்கைகளின் படி வெள்ளி மோதிரம் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தி உடலில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவும். வெள்ளி மோதிரம் அணிவதால் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் சரியாகும். வெள்ளி மோதிரம் அணிவதால் உண்டாகும் வளங்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

வெள்ளி மோதிரம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி வெள்ளி சந்திர கிரகத்துடன் தொடர்புடையது. சந்திரன் மனம் உணர்ச்சிகள் மற்றும் மன அமைதியின் காரணியாக விளங்குகிறார். வெள்ளி மோதிரம் அணிவதன் மூலம் மன அழுத்தம் குறையும் மன அமைதி கிடைக்கும் மனநிலையை சீராக்கி கோபத்தை குறைத்து நேர்மறை எண்ணங்களை வளர்க்கும். ஒருவருடைய ஆளுமை திறனை மேம்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அதிர்ஷ்டம் நிறைந்த வெள்ளி
கலாச்சாரங்களின்படி வெள்ளி அதிர்ஷ்டம் செழிப்பு மற்றும் செல்வ செழிப்புடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. பெண்கள் விழி மோதிரம் அணிவதால் வீட்டில் நிதிநிலை மேம்படும் சுபிட்சம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது. வியாபாரத்தில் இருக்கும் பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவதால் வியாபாரம் பெருகும் என்றும் லாபம் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது. இது ஒரு பாதுகாப்பு கவசம் ஆகவும் செயல்பட்டு எதிர்மறை சக்திகளை விளக்கி நல்ல வாய்ப்புகளை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
அழகை கூட்டும் வெள்ளி
வெள்ளி மோதிரங்கள் அவற்றின் தனித்துவமான பளபளப்பு மற்றும் வடிவமைப்பால் அனைவராலும் விரும்பப்படுகிறது. வெள்ளி விலை குறைவு என்பதால் அனைவரும் இதனை வாங்குவதற்கு விரும்புவார்கள். எந்த ஊரு ஆடையாக இருந்தாலும் வெள்ளி மோதிரத்தை அணியும் போது அது கவர்ச்சியான துணைப்பொருளாக செயல்படும். பாரம்பரிய உடைகளாக இருந்தாலும் சரி, நவீன உடைகளாக இருந்தாலும் சரி வெள்ளி மோதிரங்கள் அனைத்திற்கும் பொருந்தும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனைக்கும் ஏற்ப தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகின்றன.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வெள்ளி
ஜோதிடத்தின் படி வெள்ளி சந்திர பகவானின் உலோகமாக கருதப்படுகிறது சந்திரனின் சாதகமான நிலையை அதிகரிக்கவும், எதிர்மறையாற்றல்களை குறைத்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும் வெள்ளி மோதிரம் அணிய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்களை போக்குவதற்கு மன அமைதியையும் நல்லுறவுகளையும் மேம்படுத்துவதற்கு ஒருவருடைய உள்ளுணர்வை அதிகரிப்பதற்கும் ஆன்மீக சிந்தனைகளை வளர்ப்பதற்கும் வெள்ளி உதவும். வெள்ளியை பராமரிப்பதும் மிகவும் எளிதான ஒன்று. மென்மையான துணி மற்றும் சோப்பு நீரால் சுத்தம் செய்யலாம் வெள்ளி சுத்திகரிப்பு திரவத்தை பயன்படுத்தலாம். இதனால் நீண்ட காலத்திற்கு அதன் அழகை நம்மால் பாதுகாக்க முடியும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் சிறிது தங்கம் இருந்தாலும் போதும் அதில் இதை மட்டும் தடவி விடுங்கள்! தங்கம் வீடி தேடி வந்து சேரும்!



