Advertisement
அசைவம்

வீடே மணக்க மணக்க சூப்பரான கொத்தமல்லி சிக்கன் கிரேவி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். கொத்தமல்லியில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

நீங்களும் வார‌ இறுதியில் சிக்கன் செய்ய நினைத்தால், தேங்காய், கொத்தமல்லி அரைத்து விட்ட இந்த கொத்தமல்லி சிக்கன் கிரேவி செய்யுங்கள். இந்த கொத்தமல்லி சிக்கன் மசாலா சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். சிக்கனை எப்படி செய்தாலும் அது சுவை கொடுக்கும். அதை பக்குவமாக பார்த்து பார்த்து பதமாக செய்தால் இன்னும் எத்தனை ருசியாக இருக்கும்..? அப்படியொரு ரெசிபிதான் இது. வேலை நாட்களில் அசைவ உணவு சமைக்க நேரம் இல்லை என கருதுபவர்களும், ஞாயிறு விடுமுறைகளில் மட்டுமே கறி எடுத்து சமைக்க முடியும் என நினைப்பவர்களுக்கு எளிமையாக மற்றும் சுவையாக சிக்கனை சமைக்கும் ரெசிபி. இந்த சிக்கன் கிரேவியை பேச்சுலர்ஸ் கூட ஈசியாக செய்து விடலாம்.

Advertisement

கொத்தமல்லி சிக்கன் கிரேவி | Coriander Chicken Gravy Recipe In Tamil

Print Recipe
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில்
Advertisement
சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். கொத்தமல்லியில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்!
Course LUNCH
Cuisine Indian
Keyword Coriander Chicken Gravy
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 93

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கி சிக்கன்
  • 3 பெரிய வெங்காயம்
    Advertisement
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 2 துண்டு கல் பாசி
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 2 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 2 தக்காளி

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, தக்காளி கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், கல் பாசி சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும். பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கலந்து விடவும்.
  • சிக்கன் பாதி வெந்ததும் உப்பு, மல்லித்தூள், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும் கடைசியாக கொத்தமல்லி மற்றும் மிளகு தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி சிக்கன் கிரேவி தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 93kcal | Carbohydrates: 4.6g | Protein: 9.4g | Fat: 5.4g | Sodium: 54mg | Potassium: 77mg | Fiber: 3.94g | Vitamin A: 95IU | Vitamin C: 406mg | Calcium: 24mg | Iron: 7.1mg

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் காரசாரமான சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

6 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

17 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

1 நாள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago