Home சைவம் வீட்டிலேயே மக்காச்சோள பிரெட் டோஸ்ட் இப்படி செய்து கொடுக்கலாம், பிரெட்டும், மக்காச்சோளம் இருந்தா போதும் சுலபமாக...

வீட்டிலேயே மக்காச்சோள பிரெட் டோஸ்ட் இப்படி செய்து கொடுக்கலாம், பிரெட்டும், மக்காச்சோளம் இருந்தா போதும் சுலபமாக பிரெட் டோஸ்ட் செய்து அசத்தலாம்!

நாம் பெரும்பாலும் காலை உணவாக இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி என இது எல்லாம் தான் எடுத்துக் கொள்வோம். ஆனால் காலை உணவை மிகவும் அளவாக குறைவாக எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் பிரட் டோஸ்ட் பிரட் ஆம்லெட் என செய்து சாப்பிடுவார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு காலை உணவாக மாறிவிடும். பிரட்டை வைத்து நாம் ஏராளமான உணவுகள் செய்யலாம் அது அனைத்தும் மிகவும் ருசியாகவும் அட்டகாசமாகவும் இருக்கும்.

-விளம்பரம்-

பிரட் டோஸ்ட், பிரட் உப்புமா, பிரட் ஆம்லெட், பிரட் ரோல்,பிரட் சான்ட்விச் என பிரட் வைத்து செய்யக்கூடிய உணவுகளும் ஸ்நாக்ஸ்களும் ஏராளம். அந்த வகையில் மக்காச்சோளத்தையும் பிரட்டையும் வைத்து ஒரு டோஸ்ட் செய்யப் போகிறோம். இதனை காலை உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். பள்ளி கல்லூரி முடிந்து வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அவர்கள் பசியோடு வந்தால் அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 மிகவும் ஆரோக்கியமான இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட் செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் இருக்கும். மக்காச்சோளத்திலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. சில குழந்தைகளுக்கு மக்காச்சோளத்தை அப்படியே சாப்பிட பிடிக்காது அவர்களுக்கு இந்த மாதிரி மக்காச்சோளத்தை வைத்து பிரட் டோஸ்ட் செய்து கொடுத்தால் மக்காச்சோளத்தையும் அவர்கள் சாப்பிட்ட மாதிரி இருக்கும். எனவே ஒருமுறை இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட்டை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஏனென்றால் இது ஆரோக்கியமானது. வாங்க இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
1 from 1 vote

மக்காச்சோள பிரெட் டோஸ்ட் | Corn Bread Toast In Tamil

ஆரோக்கியமான இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட் செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் இருக்கும். மக்காச்சோளத்திலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. சில குழந்தைகளுக்கு மக்காச்சோளத்தை அப்படியே சாப்பிடபிடிக்காது அவர்களுக்கு இந்த மாதிரி மக்காச்சோளத்தை வைத்து பிரட் டோஸ்ட் செய்து கொடுத்தால் மக்காச்சோளத்தையும் அவர்கள் சாப்பிட்ட மாதிரி இருக்கும். எனவே ஒருமுறை இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட்டை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஏனென்றால் இது ஆரோக்கியமானது. வாங்க இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Corn Bread Toast
Yield: 4
Calories: 329kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மக்காச் சோளம்
  • 1 பாக்கெட் பிரட்
  • 3 பச்சை மிளகாய்
  • 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் நெய்
  • 2 பால்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மக்காச்சோளத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி அரிசி மாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ள வேண்டும்.அதில் பால் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கிளற வேண்டும்.
  • அந்த கலவை நன்றாக கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளற வேண்டும்.
  • பிறகு அதில் வேக வைத்துள்ள மக்காச்சோளம் சர்க்கரை சிறிதளவு உப்பு பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக ஒரு பேஸ்ட் பதத்திற்கு கிளறி கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது பிரட்டில் இந்த கலவையை எடுத்து நன்றாக தடவி தோசை கல்லில் போட்டு இருபுறமும் உன்னிடம் ஆகும் வரை டேஸ்ட் செய்து எடுத்தால் சுவையான மக்காச்சோள பிரட் டோஸ்ட் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 329kcal | Carbohydrates: 16g | Protein: 8g | Fat: 1g | Sodium: 172mg | Potassium: 299mg