மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மக்காச் சோள பணியாரம், ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

நமது பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவுகளையும் சமைத்து கொடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் பலவித ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை விருப்பமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றின் மூலம் பலவித நோய்களும் ஏற்படுகிறது. எனவே இவ்வாறு அவர்கள் சாப்பிடும் உணவுகளை அதிகப்படுத்தாமல், முடிந்தவரை ப

By ·

நமது பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவுகளையும் சமைத்து கொடுக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் பலவித ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை விருப்பமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றின் மூலம் பலவித நோய்களும் ஏற்படுகிறது. எனவே இவ்வாறு அவர்கள் சாப்பிடும் உணவுகளை அதிகப்படுத்தாமல், முடிந்தவரை பெற்றோர்கள் அவற்றை குறைத்துக் கொண்டே வரவேண்டும். எனவே வீட்டில் அவர்களுக்கு சுவையான உணவுகளை செய்து கொடுத்துப் பழகுங்கள். அவ்வாறு மிகவும் எளிமையாகவும், ஆரோக்கியமாகவும், சுவை மிகுந்ததாகவும் செய்யக்கூடிய உணவு வகைகளில் ஒன்றுதான் இந்த குழிப்பணியாரம். இதனை மக்காச்சோளம் சேர்த்து இப்படி ஆரோக்கியமான உணவாக செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயம் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

மக்காச்சோளத்தின் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான். வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரிசெய்து உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கிறது. மக்காச்சோளத்தில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம், இரும்புச்சத்து, செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன.

முன்பெல்லாம் இந்த மக்காச்சோளம் வேக வைத்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அதை எல்லாம் செய்ய யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இந்த மக்காச்சோளம்  பயன்படுத்தி இது போல ரெசிபிகளாக நாம் செய்து கொடுத்தால் வளரும். குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவை நாம் கொடுத்தது போல இருக்கும். வாங்க அந்த மக்காச்சோளம்வைத்து செய்யப்படும் பணியாரத்தை பற்றி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை