மழைக்காலத்தில், தொண்டைக்கு இதமா ருசியான இடிச்சு வச்ச நாட்டு கோழி ரசம் இப்படி செய்து பாருங்களேன்!

நாட்டுக்கோழி அப்படினாலே எல்லாருக்கும் பிடிக்கும் . அதுல ரொம்பவே நல்ல சத்துக்கள் இருக்கு. அதனால நாட்டுக்கோழி நிறைய பேர் விரும்பி சாப்பிடுவீங்க. அப்படியே நாட்டுக்கோழியில வறுவல் , குழம்பு பிரியாணி எல்லாம் பண்ணி சாப்பிட்டு இருப்பீங்க. எல்லாருக்கும் புடிச்ச நாட்டுக்கோழியில ரசம் எப்படி

By Prem Kumar · 27/11/2023

நாட்டுக்கோழி அப்படினாலே எல்லாருக்கும் பிடிக்கும் . அதுல ரொம்பவே நல்ல சத்துக்கள் இருக்கு. அதனால நாட்டுக்கோழி நிறைய பேர் விரும்பி சாப்பிடுவீங்க. அப்படியே நாட்டுக்கோழியில வறுவல் ,  குழம்பு பிரியாணி எல்லாம் பண்ணி சாப்பிட்டு இருப்பீங்க. எல்லாருக்கும் புடிச்ச நாட்டுக்கோழியில ரசம் எப்படி இடிச்சு வைக்கிறது அப்படின்னு பார்க்க இருக்கோம்.  நீங்க எப்ப எல்லாம் நாட்டு கோழி வாங்குறீர்களோ அப்ப எல்லாம் அதிலிருந்து ஒரு நாலு எலும்பு பீஸ் மட்டும் எடுத்து வச்சுட்டீங்கன்னா போதும் சூப்பரான நாட்டுக்கோழி ரசம் ரொம்பவே ஈஸியா வச்சிரலாம்.

இந்த நாட்டுக்கோழி ரசத்தை அப்போதெல்லாம் நாட்டுக்கோழியை வாங்கி உரல்ல இடிச்சு ரசம் வைப்பாங்க. ஆனால் நம்ம இப்போ இஞ்சி கல்லில் இடிச்சு வைக்க போறோம். ரொம்பவே சுவையா இருக்கும் மிக்ஸியில் அரைச்சு வைக்கிறது விட இந்த மாதிரி ஒன்னு ரெண்டா கல்லுல இடிச்சு வைக்கும் போது அதோட சுவையும் மாறாது அதுல உள்ள குணங்களும் மாறாமல் அப்படியே இருக்கும். அப்படி தான் சுவையான இந்த நாட்டுக்கோழி ரசத்தை எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி வைக்கிறது என்று பார்க்க இருக்கோம்.

அது மட்டும் இல்லாம நாட்டுக்கோழியில நல்ல ஆரோக்கியமானதா இருக்கிறப்போ அதுல ரசம் வச்சு சாப்பிட்டோம்னா அது உடலுக்கு ரொம்பவே நல்லதா இருக்கும். அது மட்டும் இல்லாம இது எலும்புகளை வலிமைப்படுத்துவதற்கு பயன்படுகிறது. சாதாரணமா நம்ம வைக்கிற ரசமே நமக்கு சளி பிரச்சனையிலிருந்து நல்ல தீர்வை கொடுக்குது. அது மட்டும் இல்லாம நாட்டுக்கோழியை இடிச்சு போட்டு கார சாரமா ரசம் வைத்து சாப்பிட்டோம்னா அது இன்னும் எவ்வளவு நல்ல பலன் கொடுக்கும் சளி பிரச்சனைக்கு. சரி வாங்க இந்த சுவையான நாட்டுக்கோழி ரசத்தை எப்படி வைக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

Recipes AMP · Quick view
View full