மழைக்காலத்தில், தொண்டைக்கு இதமா ருசியான இடிச்சு வச்ச நாட்டு கோழி ரசம் இப்படி செய்து பாருங்களேன்!

- Advertisement -

நாட்டுக்கோழி அப்படினாலே எல்லாருக்கும் பிடிக்கும் . அதுல ரொம்பவே நல்ல சத்துக்கள் இருக்கு. அதனால நாட்டுக்கோழி நிறைய பேர் விரும்பி சாப்பிடுவீங்க. அப்படியே நாட்டுக்கோழியில வறுவல் ,  குழம்பு பிரியாணி எல்லாம் பண்ணி சாப்பிட்டு இருப்பீங்க. எல்லாருக்கும் புடிச்ச நாட்டுக்கோழியில ரசம் எப்படி இடிச்சு வைக்கிறது அப்படின்னு பார்க்க இருக்கோம்.  நீங்க எப்ப எல்லாம் நாட்டு கோழி வாங்குறீர்களோ அப்ப எல்லாம் அதிலிருந்து ஒரு நாலு எலும்பு பீஸ் மட்டும் எடுத்து வச்சுட்டீங்கன்னா போதும் சூப்பரான நாட்டுக்கோழி ரசம் ரொம்பவே ஈஸியா வச்சிரலாம்.

-விளம்பரம்-

இந்த நாட்டுக்கோழி ரசத்தை அப்போதெல்லாம் நாட்டுக்கோழியை வாங்கி உரல்ல இடிச்சு ரசம் வைப்பாங்க. ஆனால் நம்ம இப்போ இஞ்சி கல்லில் இடிச்சு வைக்க போறோம். ரொம்பவே சுவையா இருக்கும் மிக்ஸியில் அரைச்சு வைக்கிறது விட இந்த மாதிரி ஒன்னு ரெண்டா கல்லுல இடிச்சு வைக்கும் போது அதோட சுவையும் மாறாது அதுல உள்ள குணங்களும் மாறாமல் அப்படியே இருக்கும். அப்படி தான் சுவையான இந்த நாட்டுக்கோழி ரசத்தை எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி வைக்கிறது என்று பார்க்க இருக்கோம்.

- Advertisement -

அது மட்டும் இல்லாம நாட்டுக்கோழியில நல்ல ஆரோக்கியமானதா இருக்கிறப்போ அதுல ரசம் வச்சு சாப்பிட்டோம்னா அது உடலுக்கு ரொம்பவே நல்லதா இருக்கும். அது மட்டும் இல்லாம இது எலும்புகளை வலிமைப்படுத்துவதற்கு பயன்படுகிறது. சாதாரணமா நம்ம வைக்கிற ரசமே நமக்கு சளி பிரச்சனையிலிருந்து நல்ல தீர்வை கொடுக்குது. அது மட்டும் இல்லாம நாட்டுக்கோழியை இடிச்சு போட்டு கார சாரமா ரசம் வைத்து சாப்பிட்டோம்னா அது இன்னும் எவ்வளவு நல்ல பலன் கொடுக்கும் சளி பிரச்சனைக்கு. சரி வாங்க இந்த சுவையான நாட்டுக்கோழி ரசத்தை எப்படி வைக்கிறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
No ratings yet

நாட்டு கோழி ரசம் | Country Chicken Rasam Recipe In Tamil

நாட்டுக்கோழியில நல்ல ஆரோக்கியமானதா இருக்கிறப்போஅதுல ரசம் வச்சு சாப்பிட்டோம்னா அது உடலுக்கு ரொம்பவே நல்லதா இருக்கும். அது மட்டும்இல்லாம இது எலும்புகளை வலிமைப்படுத்துவதற்கு பயன்படுகிறது. சாதாரணமா நம்ம வைக்கிற ரசமேநமக்கு சளி பிரச்சனையிலிருந்து நல்ல தீர்வை கொடுக்குது. அது மட்டும் இல்லாம நாட்டுக்கோழியைஇடிச்சு போட்டு கார சாரமா ரசம் வைத்து சாப்பிட்டோம்னா அது இன்னும் எவ்வளவு நல்ல பலன்கொடுக்கும் சளி பிரச்சனைக்கு. சரி வாங்க இந்த சுவையான நாட்டுக்கோழி ரசத்தை எப்படி வைக்கிறதுன்னுதெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH, Rasam, Soup
Cuisine: tamil nadu
Keyword: Country chicken Rasam
Yield: 4
Calories: 162kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 பீஸ் நாட்டுக்கோழி எலும்பு
  • 6 சின்ன வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 6 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் நாட்டுக்கோழியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி கல்லில் நாட்டு கோழியை சேர்த்து நன்றாக இடித்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.
  •  
     பிறகுஇஞ்சி கல்லை சுத்தமாக கழுவிவிட்டு அதில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றுஇரண்டாக நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சீரகம், மிளகு, சோம்பு,பூண்டு சேர்த்து நன்றாக ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துதாளிக்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  • அதில் தட்டி எடுத்து வைத்துள்ள பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.  பிறகு அதில் இடித்து எடுத்து வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு பூண்டு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் .
  • பின்பு அதில் இடித்து வைத்துள்ள நாட்டு கோழியைசேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை  30 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். நன்றாக30 நிமிடம் வெந்து கொதித்த பிறகு அதில் கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாககலந்து விட்டு இறுதியாக கொத்தமல்லி தழையில் தூவி இறக்கினால் காரசாரமான சுவையில் இடித்துவைத்த நாட்டுக்கோழி ரசம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Protein: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg