Home அசைவம் இந்த வாரம் இறுதியில் நண்டு வாங்கி காரசாரமான நண்டு மசாலா இப்படி செய்து பாருங்க! மிச்சம்...

இந்த வாரம் இறுதியில் நண்டு வாங்கி காரசாரமான நண்டு மசாலா இப்படி செய்து பாருங்க! மிச்சம் வைக்காமா சாப்பிடுவாங்க!

குளிர் காலங்கள், மற்றும் மழை காலங்களில் நண்டு சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். நண்டு அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் உணவு ஆகும் . எந்த வகையாக நண்டாக இருந்தாலும் இந்த செய்முறையில் மசாலா செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்

-விளம்பரம்-

 நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம் வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனி உங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நண்டு மசாலா செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அல்லது சுட சுட சாதத்துடன்  இந்த நண்டு மசாலா சேர்த்து சாப்பிடலாம்.  இந்த வார கடைசில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Print
5 from 2 votes

நண்டு மசாலா | Crab Masala Recipe In Tamil

 நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம்வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனிஉங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்றுகீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நண்டு மசாலா செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால்அவ்வளவு அற்புதமாக இருக்கும். அல்லது சுட சுட சாதத்துடன்  இந்த நண்டு மசாலா சேர்த்து சாப்பிடலாம்.  இந்த வார கடைசில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: crab masala
Yield: 4
Calories: 110kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 பெரியது நண்டு
  • 1/4 கப் தேங்காய்
  • 25 சின்ன வெங்காயம்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீ ஸ்பூன் சீரகம்
  • எண்ணெய் தேவைக்கு
  • கடுகு சிறிது
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவைக்கு

செய்முறை

  • நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும்.
  • இடையிடையே கிளறி விடவும்.  15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.நண்டில் இருக்கும் தண்ணீர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும்.
  • சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 110kcal | Protein: 30g | Saturated Fat: 0.5g | Potassium: 625mg | Sugar: 0.5g

இதையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!