Advertisement
அசைவம்

இந்த வாரம் இறுதியில் நண்டு வாங்கி காரசாரமான நண்டு மசாலா இப்படி செய்து பாருங்க! மிச்சம் வைக்காமா சாப்பிடுவாங்க!

Advertisement

குளிர் காலங்கள், மற்றும் மழை காலங்களில் நண்டு சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். நண்டு அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் உணவு ஆகும் . எந்த வகையாக நண்டாக இருந்தாலும் இந்த செய்முறையில் மசாலா செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்

 நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம் வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனி உங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நண்டு மசாலா செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அல்லது சுட சுட சாதத்துடன்  இந்த நண்டு மசாலா சேர்த்து சாப்பிடலாம்.  இந்த வார கடைசில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

நண்டு மசாலா | Crab Masala Recipe In Tamil

Print Recipe
 நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம்வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனிஉங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்றுகீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நண்டு மசாலா செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால்அவ்வளவு அற்புதமாக
Advertisement
இருக்கும். அல்லது சுட சுட சாதத்துடன்  இந்த நண்டு மசாலா சேர்த்து சாப்பிடலாம்.  இந்த வார கடைசில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword crab masala
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 110

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 பெரியது நண்டு
  • 1/4 கப் தேங்காய்
  • 25 சின்ன வெங்காயம்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீ ஸ்பூன் சீரகம்
  • எண்ணெய் தேவைக்கு
  • கடுகு சிறிது
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவைக்கு

Instructions

  • நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
  • பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும்.
  • இடையிடையே கிளறி விடவும்.  15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.நண்டில் இருக்கும் தண்ணீர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும்.
  • சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 110kcal | Protein: 30g | Saturated Fat: 0.5g | Potassium: 625mg | Sugar: 0.5g

இதையும் படியுங்கள் : இந்த வாரம் ஸ்பெஷாலக நண்டு வாங்கி செட்டிநாடு நண்டு மசாலா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

6 நிமிடங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

4 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

13 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

13 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

14 மணி நேரங்கள் ago