சுடச்சுட வெள்ளரிக்காய் பஜ்ஜி மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுங்கள்!!
பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு வகையும் ஒவ்வ
பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் வெள்ளரிக்காய் வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த வெள்ளரிக்காயை அப்படியே தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் வெள்ளரிக்காய் பஜ்ஜி செய்வது எப்படி என்று காண உள்ளோம்.
இந்த வெள்ளரிக்காய் சுவையை மட்டும் தராமல், ஆரோக்கியத்தையும் அள்ளி தருகிறது. இது இரத்தம் சுத்திகரிக்க, இதயத்தை பாதுகாக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த என பல விதமான நன்மைகளை நமக்கு தருகிறது. இந்த சில்லென்ற பருவ காலத்தில் ஒரு கப் தேநீருடன் இந்த வெள்ளரிக்காய் பஜ்ஜி போட்டு சாப்பிட்டால் போதும் ஒரு இனிமையான விருந்து கிடைக்கும். இதன் மேல் பூசப்பட்டிருக்கும் கடலை மாவின் மொறு மொறுப்பான தன்மையும் உள்ளே வெள்ளரிக்காயின் மென்மையான தன்மையும் காரசாரமான சுவையும் உங்கள் நாக்கில் எச்சு ஊற வைத்து விடும்.
காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, காய்கறிகளை சாப்பிட வைக்க ஒரு அருமையான வழி தான் பஜ்ஜியாக செய்து கொடுப்பது தான். எனவே இந்த வெள்ளரிக்காயை பஜ்ஜியாக செய்து கொடுத்தால், அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் மாலை வேளையில் டீ/காபி குடிக்க கொடுக்கும் வேளையில் செய்து கொடுத்தால், அவர்களின் பசி நீங்கும். தீடீரென்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட இந்த வெள்ளரிக்காய் பஜ்ஜி செய்து அசத்திடலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இந்த பஜ்ஜியின் சுவையே தனி தான்!