இந்த வெயில் காலத்துக்கு தயிர் சேமியா ஒரு தடவ ட்ரை பண்ணுங்க!!

வெயில் காலம் ஆரம்பிச்சிடுச்சு அப்படின்னாலே நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கணும் அப்பதான் நம்ம உடம்பு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமா இருக்கும். இல்ல அப்படின்னா சூடு பிடிச்சு அதனால நிறைய பிரச்சனைகள் வரும். தண்ணி குடிக்கிறதோடு மட்டுமல்லாமல் நிறைய தண்ணீர் சம்பந்தமான காய்கறிகள் பழங்கள் எ

By ·

வெயில் காலம் ஆரம்பிச்சிடுச்சு அப்படின்னாலே நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கணும் அப்பதான் நம்ம உடம்பு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமா இருக்கும். இல்ல அப்படின்னா சூடு பிடிச்சு அதனால நிறைய பிரச்சனைகள் வரும். தண்ணி குடிக்கிறதோடு மட்டுமல்லாமல் நிறைய தண்ணீர் சம்பந்தமான காய்கறிகள் பழங்கள் எல்லாமே சாப்பிடணும் உதாரணமாக தண்ணீர் பழம், வெள்ளரிக்காய், சௌசௌகாய், பூசணிக்காய், சுரைக்காய் இந்த மாதிரி எல்லாமே சாப்பிடணும் அந்த வகையில தயிர் மோர் இதெல்லாமே உணவுல அதிகமா சேர்த்துக்கணும்.

தயிர் சாதம் மோர் சாதம் இதெல்லாம் சாப்பிட்டு இருப்பீங்க அதே மாதிரி ஒரு சிலருக்கு தயிர் சேமியா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்படி ரொம்ப பிடிச்சவங்களுக்கு இந்த மாதிரி ஒரு தடவை தயிர் சேமியா செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதுக்கு நம்ம சேமியாவை பக்குவமா வேகவைத்து எடுக்கணும். ரொம்ப குழைவாகவும் இல்லாமல் ரொம்ப அரைவேக்காடாகவும் இல்லாமல் சேமியாவை வேக வைத்து எடுத்து இந்த தயிர் சேமியா கிளறனும்.

குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம் வேலைக்கு போறவங்களுக்கு கொடுத்து விடலாம். வீட்டில் இருக்கக் கூடிய எல்லாருக்குமே மதியம் லஞ்சுக்கு பரிமாறலாம் காலைல டிபனுக்கும் பரிமாறலாம். எதுக்கு பரிமாறினாலும் விரும்பி சாப்பிடுவாங்க நிறையவே சாப்பிடுவாங்க இதுல முந்திரிப்பருப்பு உலர் திராட்சை மாதுளம் பழ முத்துக்கள் எல்லாமே சேர்த்து செஞ்சோம் அப்படின்னா சுவை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான தயிர் சேமியா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ஸ்ட்ராபெர்ரி ,தயிர் சேர்த்து சுவையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை