Home ஜூஸ் ஸ்ட்ராபெர்ரி ,தயிர் சேர்த்து சுவையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!

ஸ்ட்ராபெர்ரி ,தயிர் சேர்த்து சுவையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி இப்படி செய்து கொடுங்க!

தயிர் என்றாலே பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் ஒல்லியாக இருக்கின்றார்கள் என்றால் தினமும் ஒரு கைப்பிடி தயிர் சாதம் ஊட்டி வந்தால் அவர்கள் விரைவாக சதை பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவ்வாறு தயிரில் அதிக அளவு புரதச் சத்து இருக்கிறது. உடம்புக்கு தேவையான கால்சியம் சத்தையும் கொடுக்கிறது. எனவே தினமும் இரண்டு ஸ்பூன் தயிரையாவது அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

தயிருடன் சர்க்கரை சேர்த்து குடிப்பது தான் லஸ்ஸி எனப்படும். அவ்வாறு தயிரை அப்படியே சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கும். அதனுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும், அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். லஸ்ஸி பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். வாருங்கள் இந்த லஸ்ஸியை ஸ்ட்ராபெர்ரி சேர்த்து ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்ய முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சுண்டி இழுக்கும் சிகப்பு ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, போலிக் அமிலம். சையனோகோபாலமின், வைட்டமின் ஏ. வைட்டமின் கே போன்ற பல வைட்டமின்களும். செம்பு. மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால் கேன்சர் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது.அருமையான ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி பருக அனைவரும் விரும்புவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
3 from 1 vote

ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி | Strawberry Lassi Recipe In Tamil

தயிர் என்றாலே பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள், உடம்புக்கு தேவையான கால்சியம் சத்தையும் கொடுக்கிறது.எனவே தினமும் இரண்டு ஸ்பூன் தயிரையாவது அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தயிருடன் சர்க்கரை சேர்த்து குடிப்பது தான் லஸ்ஸி எனப்படும். அவ்வாறு தயிரை அப்படியே சாப்பிடும்பொழுது ருசியாக இருக்கும். சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும்,அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். லஸ்ஸி பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.வாருங்கள் இந்த லஸ்ஸியை ஸ்ட்ராபெர்ரி சேர்த்து ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி செய்ய முடியும் என்பதைபற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Stawberry Lassi
Yield: 5
Calories: 45kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 8 ஸ்ட்ராபெர்ரி பழங்கள்
  • 2 கப் தயிர்
  • 1 கப் தண்ணீர்
  • 8 பாதாம்
  • 8 பிஸ்தா
  • 5 மே.கரண்டி சீனி

செய்முறை

  • 4 முதலில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போடவும்.
  • இதனுடன் தயிர், தண்ணீர், சீனி, பாதம், பிஸ்தா சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு டம்ளரில் லஸ்ஸி ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்து மேலே சிறுது நறுக்கிய பாதம் தூவி பருகலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 45kcal | Protein: 9g | Saturated Fat: 0.6g | Cholesterol: 1.8mg | Sodium: 5mg | Potassium: 43mg | Fiber: 2.6g | Iron: 0.5mg