கருவேப்பிலை முட்டை சுக்கா இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க!!

பொதுவா நம்ம செய்ற எல்லா குழம்பு காய்கறி பொரியல்லையும் நம்ம கருவேப்பிலை போட்டு தாளித்து சேர்ப்போம். ஆனால் அந்த கருவேப்பிலையை நம்ம சாப்பிட மாட்டோம் அது அப்படியே கீழே போட்டுருவோம். ஆனா கருவேப்பிலை இல்ல அவ்ளோ இரும்பு சத்துக்கள் இருக்கு. அந்த இரும்பு சத்துக்கள் உடம்புல ஹீமோகுளோபின் அள

By Prem Kumar · 7/10/2025

பொதுவா நம்ம செய்ற எல்லா குழம்பு காய்கறி பொரியல்லையும் நம்ம கருவேப்பிலை போட்டு தாளித்து சேர்ப்போம். ஆனால் அந்த கருவேப்பிலையை நம்ம சாப்பிட மாட்டோம் அது அப்படியே கீழே போட்டுருவோம். ஆனா கருவேப்பிலை இல்ல அவ்ளோ இரும்பு சத்துக்கள் இருக்கு. அந்த இரும்பு சத்துக்கள் உடம்புல ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இரும்பு சத்து குறைபாடு இருக்கிறவங்க அடிக்கடி கருவேப்பிலையை உணவில் சேர்த்துக்கணும். அப்படி கருவேப்பிலையை சாப்பிடுவதற்கு பிடிக்கலைன்னா கருவேப்பிலை வச்சு கருவேப்பிலை சட்னி, கருவேப்பிலை தொக்கு இந்த மாதிரி ஏதாவது செஞ்சு சாப்பிடணும் ஆனா அதுவும் ஒரு சில பேர் சாப்பிட மாட்டாங்க அப்படின்னா அந்த கருவேப்பிலையை வச்சு சூப்பரான ஒரு முட்டை சுக்கா செஞ்சு பாருங்க.

குழந்தைகளுக்கு கண்டிப்பா முட்டை ரொம்ப பிடிக்கும் அதனால முட்டை வச்சு செய்யக்கூடிய இந்த ரெசிபியை கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கருவேப்பிலை முட்டை சுக்கா ரெசிபி சாப்பிடறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். கலவை சாதங்களான புளி சாதம் லெமன் சாதம், தக்காளி சாதம், புலாவ் அப்படின்னு எல்லாத்துக்குமே இது சூப்பரான ஒரு சைடு டிஷ்ஷா இருக்கும். பருப்பு சாதம் ரசம் சாதம் பழைய கஞ்சி சுடு கஞ்சின்னு எல்லாத்துக்குமே இத வச்சு சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும்.

சூப்பரான இந்த கருவேப்பிலை முட்டை சுக்காவை கண்டிப்பா ஒரு தடவை நீங்க வீட்ல செஞ்சு பாக்கணும். இந்த முட்டை சுக்கா ரெசிபி சாப்பிடறதுக்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். ருசியான இந்த கருவேப்பிலை முட்டை சுக்கா ரெசிபியை கண்டிப்பா வீட்ல செஞ்சு அசத்துங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த கருவேப்பிலை முட்டை சுக்காக்கு நம்ம வறுத்து அரைச்சு ஒரு மசாலா சேர்க்கப் போறோம் அது ரொம்பவே ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கருவேப்பிலை முட்டை சுக்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை வச்சு இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா பட்டர் கார்லிக் முட்டை செய்து பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full