முட்டை வச்சு இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா பட்டர் கார்லிக் முட்டை செய்து பாருங்கள்!

- Advertisement -

முட்டை வச்சு முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை வறுவல் அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு போர் அடிச்சிருச்சா அப்போ இந்த மாதிரி பட்டர் கார்லிக் முட்டை ஒரு தடவ செஞ்சு பாருங்க.குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட வாங்க. இந்த ரெசிப்பிய நீங்க காலையில பிரேக் பாஸ்ட்டாவே குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இல்லனா மாலை நேரத்தில் வீட்டுக்கு வரும்போது இத செஞ்சு கொடுத்து அசத்தலாம். அவ்ளோ ருசியா இருக்கும். இத பார்த்தாலே ஒரு ரெஸ்டாரன்ட் வாங்குன பீல் கிடைக்கும்.

-விளம்பரம்-

சாப்டுட்டு டேஸ்ட்ல அசந்து போய்டுவாங்க. நெஜமாவே வீட்லதான் செஞ்சுதா இல்ல கடையில வாங்கிட்டு வந்தீங்களான்னு கேட்பாங்க அந்த அளவுக்கு ஒரு ரெஸ்டாரன்ட் பீல் கொடுக்கும். பட்டர் கார்லிக் சிக்கன் சாப்பிட்டுருப்பீங்க ஆனா கொஞ்சம் வித்தியாசமா பட்டர் கார்லிக் போச்சு இந்த மாதிரி முட்டை செஞ்சு பாருங்க கண்டிப்பா டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். இதுல காரம் அதிகமா சேர்க்காததால குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் இதை சைடு டிஷ்ஷா கொடுத்து விடலாம்.

- Advertisement -

பிரைட் ரைஸ் மாதிரியான ரெசிப்பிஸ் செய்யும்போது அதுக்கு சைடு டிஷ் ஷா இத செஞ்சா அவ்ளோ சூப்பரா இருக்கும். குழந்தைகளோட டிபன் பாக்ஸுக்கும் சிம்பிளா ப்ரைட் ரைஸ் செஞ்சிட்டு அதுக்கு தொட்டுக்க இந்த சூப்பரான ரெசிபியை கொடுக்கலாம். கண்டிப்பாக டிபன் பாக்ஸ் காலியாகி தான் வீட்டுக்கு வரும். இந்த பட்டர் கார்லிக் முட்டை கண்டிப்பா யாருமே வீட்ல செஞ்சிருக்கவே மாட்டீங்க. முட்டை ரொம்ப விரும்பி சாப்பிடுறவங்க வித்தியாசமா சாப்பிடணும்னு ஆசைப்பட்டீங்கன்னா கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான வித்தியாசமான பட்டர் கார்லிக் முட்டை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

Print
No ratings yet

பட்டர் கார்லிக் முட்டை | Butter Garlic Egg Recipe In Tamil

முட்டை வச்சு முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை வறுவல் அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சு போர் அடிச்சிருச்சா அப்போ இந்த மாதிரி பட்டர் கார்லிக் முட்டை ஒரு தடவ செஞ்சு பாருங்க.குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட வாங்க. இந்த ரெசிப்பிய நீங்க காலையில பிரேக் பாஸ்ட்டாவே குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இல்லனா மாலை நேரத்தில் வீட்டுக்கு வரும்போது இத செஞ்சு கொடுத்து அசத்தலாம். அவ்ளோ ருசியா இருக்கும். இத பார்த்தாலே ஒரு ரெஸ்டாரன்ட் வாங்குன பீல் கிடைக்கும். சாப்டுட்டு டேஸ்ட்ல அசந்து போய்டுவாங்க. நெஜமாவே வீட்லதான் செஞ்சுதா இல்ல கடையில வாங்கிட்டு வந்தீங்களான்னு கேட்பாங்க அந்த அளவுக்கு ஒரு ரெஸ்டாரன்ட் பீல் கொடுக்கும். பட்டர் கார்லிக் சிக்கன் சாப்பிட்டுருப்பீங்க ஆனா கொஞ்சம் வித்தியாசமா பட்டர் கார்லிக் போச்சு இந்த மாதிரி முட்டை செஞ்சு பாருங்க.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Butter Garlic Egg
Yield: 4 People
Calories: 65kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 4 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  • 3 டேபிள் ஸ்பூன் பால்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவுக்கு பட்டர் சேர்த்து அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் மறுபடியும் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய பூண்டு சில்லி ஃப்ளேக்ஸ் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பிறகு சோளமாவை தண்ணீரில் கலந்து அதனையும் சேர்த்து பால் சேர்த்து நன்றாக கலந்து பொரித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • ஐந்து நிமிடத்திற்கு பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பட்டர் கார்லிக் முட்டை தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 65kcal | Carbohydrates: 2.8g | Protein: 6.3g | Fat: 2.6g | Sodium: 84mg | Potassium: 185mg | Vitamin A: 270IU | Vitamin C: 126mg | Calcium: 18mg | Iron: 10.67mg

இதனையும் படியுங்கள் : சிக்கன் முட்டை வறுவல் இப்படி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!!