- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
தனியா சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. தனியா முட்டை வறுவல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் சேர்த்து இந்த சிக்கன் முட்டை வறுவல் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. ஒரு தடவ செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.வீட்ல இருக்கவங்களும் டேஸ்ட் ரொம்ப பிடிச்சு போய் அடிக்கடி கேட்பாங்க. சுட சுட சாதத்துக்கும் இட்லி தோசை சப்பாத்தி பூரி கலவை சாதம் தயிர் சாதம் இது மட்டுமில்லாமல் சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி மஸ்ரூம் பிரியாணி அப்படின்னு எல்லாத்துக்குமே இது ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
பழைய சாதத்துக்கும் கூட இது ஒரு சூப்பரான காம்பினேஷன். வீட்ல நிறைய பழைய சாதம் இருந்துச்சுன்னா சிக்கன் எடுத்துட்டு வந்து இந்த மாதிரி சிக்கன் முட்டை வறுவல் செஞ்சு கொடுத்துடுங்க கண்டிப்பா பழைய சாதம் கொஞ்சம் கூட மீதி இருக்காது ஃபுல்லா காலி பண்ணிடுவாங்க. இந்த ரெசிபி குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பிடிச்ச மாதிரியான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கு இப்ப ஒருவேளை சிக்கன் கம்மியா இருந்தா இந்த முட்டையை போட்டு அப்படியே மேட்ச் பண்ணி விட்ருங்க. அவங்களும் டேஸ்ட்ல சூப்பரா சாப்பிட்டு போவாங்க. நீங்க ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு சிக்கன் எடுத்துட்டு வந்து இந்த மாதிரி சிக்கன் முட்டை வறுவல் செஞ்சிடுங்க. காலையிலேயே செஞ்சிட்டீங்களா அன்னைக்கு முழுவதும் டிபனுக்கும் சாதத்துக்கும் அதையே வச்சு சாப்பிடலாம் எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும்.
உங்களுக்கு எவ்வளவு முட்டை வேணுமோ அவ்வளவு முட்டை தாராளமா சேர்த்துக்கலாம். சிக்கன் எவ்வளவு வேணுமோ அதுக்கு ஏத்த மாதிரி சேர்த்து பொருட்கள் எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தியா போட்டுக்கோங்க. அப்போ ஒரு சூப்பர் டேஸ்ட்டான சிக்கன் முட்டை வறுவல் தயாராகிவிடும். இதை செய்றதுக்கு நிறைய நேரம் எல்லாத்தையும் தேவைப்படாது மிக மிக குறைந்த நேரம் மட்டுமே போதுமானது இப்ப வாங்க இந்த சுவையான சிக்கன் முட்டை வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதனையும் படியுங்கள் : ஒரு முறை சிக்கன் வாங்கி இப்படி ருசியான புதினா சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க அசத்தலான சுவையில் இருக்கும்!!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கியும் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு ,மிளகாய் தூள் கரம் மசாலா, மல்லி தூள், சீரகத்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி அதன் மேல் மிளகுத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வெந்ததும் திருப்பி சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சிக்கன் முட்டை வறுவல் தயார்.






